For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மதமாற்ற தடை சட்டம்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதமாற்றத் தடைச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழக அரசு சமீபத்தில் மதமாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களைஇரண்டு ஆண்டுகள் வரை சிறையில் தள்ளவும், ரூ.50,000 வரை அபராதம் விதிக்கவும் இந்தச் சட்டத்தில்இடமுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதிலுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சட்டத்தை இந்துஅமைப்புகள் மட்டும் தீவிரமாக ஆதரித்துள்ளன.

சிறுபான்மை மதங்களான கிருஸ்தவம் மற்றும் முஸ்லீம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் இந்தச் சட்டத்தைக்கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கடந்த 24ம் தேதி கிருஸ்தவ மற்றும் முஸ்லீம் மத அமைப்புகள் தாங்கள் நடத்தி வரும் கல்விநிறுவனங்களையும் மூடி உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த மதமாற்றத் தடைச் சட்டத்தை செல்லாதது என்றும் அது சட்ட விரோதமானது என்றும் அறிவிக்கவேண்டும் எனக் கோரி திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ் என்ற கிருஸ்தவப் பாதிரியார் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,

கடந்த அக்டோபர் 5ம் தேதி தமிழக அரசு கொண்டு வந்துள்ள கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தால் இந்தியாவின்மதச்சார்பின்மை குறித்தே சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் இந்தச் சட்டத்தால் சமுதாயம், கல்வி மற்றும் பொருளாதார ரீதியில் மக்கள் பிளவுபடும் அபாயமும்ஏற்பட்டுள்ளது.

மேலும் சிறுபான்மை மதங்களை நசுக்குவதற்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்து அடிப்படைவாதிகளின் கையில் இந்தச் சட்டம் சிக்கிக் கொண்டால் சிறுபான்மை மதத்தினரின் பாடு மிகவும்திண்டாட்டமாகி விடும். சிறுபான்மையினர் மத்தியில் பெரும் பயத்தையும் இந்தச் சட்டம் ஏற்படுத்தியுள்ளது.

ஒருவரைக் கட்டாயப்படுத்தி இன்னொரு மதத்திற்கு மாறச் செய்வது என்பது ஒரு தவறான எண்ணமாகும்.அர்த்தமற்றதும் கூட.

எனவே இந்தச் சட்டத்தையே சட்ட விரோதம் என்று கூறி அதை செல்லாதது என்று அறிவிக்க வேண்டும். மேலும்இவ்வழக்கு முடியும் வரை மதமாற்றத் தடைச் சட்டம் நிறைவேற்றப்படுவதை நிறுத்திவைக்க வேண்டும் என்றுஅம்மனுவில் தங்கராஜ் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியான சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி நாகப்பன் ஆகியோர் அடங்கியடிவிஷன் பெஞ்ச இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.

இவ்வழக்கு தொடர்பாக அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கநீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X