For Daily Alerts
Just In
அமைச்சரின் மனிதாபிமானம்... உயிர் பிழைத்தார் முதியவர்
திண்டுக்கல்:
விபத்தில் அடிபட்டு சாலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த முதியவரை மீட்ட போக்குவரத்துத் துறைஅமைச்சர் விஸ்வநாதன் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்ததால் அந்தப் பெரியவர்உயிர் பிழைத்தார்.
போக்குவரத்து அமைச்சர் விஸ்வநாதன் திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டங்களைத்துவக்கி வைத்தார். இறுதியாக அவர் திண்டுக்கல் நோக்கி வந்தார். அப்போது வடுகபட்டி பகுதியில் சாலையோரம்ஒரு முதியவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்.
உடனே காரை நிறுத்தச் சொல்லி இறங்கிய அவர் விபத்தில் அடிபட்டு கை, கால் துண்டிக்கப்பட்டு, உயிருக்குப்போராடிக் கொண்டிருந்த முதியவரை அந்தப் பக்கம் வந்த அரசு பஸ்சை நிறுத்தி அரசு மருத்துவமனைக்குக்கொண்டு செல்ல உத்தரவிட்டார்.
-->


