பழ.நெடுமாறனின் நண்பர் வீட்டில் க்யூ பிராஞ்ச் போலீசார் விடிய விடிய சோதனை
மானாமதுரை:
பழ.நெடுமாறனின் நெருங்கிய நண்பரும் தமிழ் தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளருமான பரந்தாமானின் மானாமதுரை வீட்டை க்யூபிராஞ்ச் போலீசார் சோதனையிட்டனர். அங்கிருந்து ஜெலாட்டின் குச்சிகள் கைப்பற்றப்பட்டன.
பரந்தாமன் ஏற்கனவே பொடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதற்காக நேற்றிரவு சென்னையில் இருந்து சிறப்புப் போலீஸ் குழு மானாமதுரை வந்தது. பரந்தாமனின் வீட்டையும் அவரது கோழிப்பண்ணையையும் கடையையும் போலீசார் சோதனையிட்டனர். அப்போது கடையிலும் பண்ணையிலும் இருந்த 25 ஜெலாட்டின் குச்சிகள்பறிமுதல் செய்யப்பட்டன.
நள்ளிரவில் தொடங்கிய இச் சோதனைகள் விடிய விடிய நடந்தன.
பாகைளை தகர்க்க உதவும் ஜெலாட்டின் குச்சிகள் தவிர வேறு எந்தவிதமான பொருள்களும் ஆவணங்களும் போலீசாருக்கு சிக்கவில்லை.
சோதனை குறித்து எந்த விவரத்தையும் தெரிவிக்க போலீசார் மறுத்துவிட்டனர்.
-->


