கர்நாடகாவில் தமிழ் படங்களுக்கு தடை: பிரதமருக்கு சரத் கடிதம்
சென்னை:
கர்நாடக மாநிலத்தில் தமிழ்ப் படங்களைத் திரையிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய்க்குதென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளரும், ராஜ்யசபா திமுக எம்.பியுமான நடிகர் சரத்குமார் கடிதம்எழுதியுள்ளார்.
சரத் எழுதியுள்ள கடிதத்தில்,
காவிரி விவகாரம் தொடர்பாக கர்நாடகத்தில் தமிழ் விரோத மனப்பான்மை உருவாகியுள்ளதையும், அதேபோன்றநிலை தமிழகத்தில் உருவாகியுள்ளதையும் பற்றி சமீபத்தில் உங்களுக்குக் கடிதம் எழுதியது நினைவிருக்கலாம்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள தியேட்டர்களில் தமிழ்ப் படங்களைக் காட்டக் கூடாது என்று அங்குள்ளவிநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்படுகின்றனர். தமிழகத்திலும் அதே போன்றஉணர்வு ஏற்பட்டுள்ளது.
இதனால் இரு மாநிலங்களிலும் உள்ள திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் அதிபர்களுக்கும்,விநியோகஸ்தர்களுக்கும் பெரும் பண நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இதில் மிகவும் கவலை அளிக்கக் கூடிய விஷயம் என்னவென்றால், இரு மாநிலங்களிலும் உள்ள மற்றபொருளாதார நிறுவனங்களையும் பாதிக்கிற அளவுக்கு இந்தப் பிரச்சனை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்நிலை தொடர்ந்தால் அது நாட்டின் ஒற்றுமைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
எனவே ஒட்டுமொத்த இந்திய மக்களும், குறிப்பாக தமிழகத்தில் உள்ள நாங்களும் இவ்விஷயத்தில் உங்கள் மீதுமிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளோம்.
நீங்கள் மிகச் சிறந்த நிர்வாகி என்ற வகையில் மக்களின் பிரச்சனைகள், வேறுபாடுகளைத் தீர்த்து வைத்துநல்லிணக்கம் ஏற்படுத்தி வருகிறீர்கள். பிரச்சனைகள் ஏற்பட்டு தடம் புரளும் போதெல்லாம் அதைச் சரி செய்துவண்டி ஒழுங்காகச் செல்ல நடவடிக்கை எடுக்கிறீர்கள்.
அதே போலவே தற்போது தமிழகம்-கர்நாடகம் மாநிலங்களுக்கு இடையிலான சினிமா தொழிலில் ஏற்பட்டுள்ளபிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதற்காக நீங்கள் இவ்விஷயத்தில் தலையிட வேண்டும்.
இதற்காகத் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சிலின் கூட்டத்தையும் நீங்கள் கூட்ட வேண்டும் என்று அக்கடிதத்தில்சரத் கூறியுள்ளார்.
-->


