For Daily Alerts
Just In
ஊட்டியில் கடும் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்பு
ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளது.
நீலகிரியில் வழக்கமாக டிசம்பர் மாத இறுதியில்தான் பனிப்பொழிவு ஆரம்பிக்கும். ஆனால் இந்த ஆண்டுவழக்கத்திற்கு விரோதமாக இப்போதே ஆரம்பித்து விட்டது.
பகலிலும் கூட கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் 5 அடி தூரத்தில் வரும் வாகனங்களைக் கூட பார்க்கமுடியவில்லை. இதனால், மிகவும் மெதுவாகவே வாகனங்கள் செல்ல முடிகிறது. இரவிலும் அதிகாலையிலும் வாகனப்போக்குவரத்து அடியோடு நிறுத்தப்பட்டு விடுகிறது.
இந்தப் பனிப் பொழிவால் அலுவலகங்கள், பள்ளிகள் கூட தாமதமாகவே தொடங்குகின்றன.
ஊட்டியில் வெப்பநிலை கடந்த இரு வாரங்களாகவே சராசரியாக 4 டிகிரி செல்சியசாகவே உள்ளது.
-->


