For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உலகக் கோப்பை கிரிக்கெட்: இலங்கை அணி அறிவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட்போட்டியில் விளையாடவுள்ள இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகவெள்ளத்தில் ஆழ்த்தும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி மாதம் துவங்குகின்றன.

இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களின் உத்தேசப் பெயர்ப் பட்டியல் ஏற்கனவே இதில் கலந்துகொள்ளவுள்ள நாடுகளால் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

இறுதிப் பெயர்ப் பட்டியலைத் தயாரிக்கும் பணியிலும் அந்தந்த நாடுகளின் கிரிக்கெட் போர்டுகள் தீவிரமாகஈடுபட்டுள்ளன.

ஆஸ்திரேலியா, பங்களாதேஷ், கனடா, இங்கிலாந்து, ஹாலந்து, இந்தியா, கென்யா, நமீபியா, நியூஸிலாந்து,பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகள் இந்த உலகக்கோப்பைப் போட்டியில் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில் இலங்கை அணி தன்னுடைய வீரர்களை இன்று அறிவித்துள்ளது. சனத் ஜெயசூர்யா தலைமையிலான15 கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் இன்று இலங்கை கிரிக்கெட் போர்டினால் அறிவிக்கப்பட்டுள்ளன.

இவர்களில் கடந்த 1999 உலகக் கோப்பைக்குப் பின்னர் இரண்டு ஒருநாள் பந்தயங்களில் மட்டுமே ஆடிய ஹாசன்திலகரத்னேயும் ஒருவர். இவரைத் தவிர தற்போது அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் உலகக் கோப்பைபெயர்ப் பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்.

குறுகிய காலத்தில் 290க்கும் அதிகமான ஒருநாள் விக்கெட்டுகளையும், 400க்கும் மேற்பட்ட டெஸ்ட்விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்த சுழற்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரனும் சந்தேகமேஇல்லாமல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அணி விவரம்:

சனத் ஜெயசூர்யா (கேப்டன்), மறவன் அட்டப்பட்டு, மஹிலா ஜெயவர்தனே, குமார் சங்கக்காரா, அரவிந்த டிசில்வா, ருசெல் அர்னால்டு, ஜெஹன் முபாரக், அவிஷ்கா குணவர்தனே, ஹசன் திலகரத்னே, முத்தையா முரளிதரன்,சமிந்தா வாஸ், தில்ஹாரா பெர்னாண்டோ, புலஸ்தி குணரத்னே, பிரபாத் நிஸாங்கா மற்றும் சரிதா புத்திகாபெர்னாண்டோ.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X