""என் கணவரை மீட்பது போல் கிருஷ்ணா நாடகமாடினார்"": நாகப்பா மனைவி ஆவேசம்
பெங்களூர்:
"கர்நாடக முதல்வர் கிருஷ்ணா எங்கள் மீது எள்ளளவும் கருணை காட்டவில்லை. என் கணவரை மீட்பது போல்நன்றாக நாடகமாடினார்" என்று கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவின் மனைவி பரிமளா ஆவேசத்துடன்கூறினார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் பரிமளா கூறுகையில்,
என் கணவர் கடத்தல் ராஜ்குமார் கடத்தலைப் போல் அவ்வளவு கடுமையானதாக இருக்கவில்லை. பெரியார்விடுதலை இயக்கத்தின் தலைவர் கொளத்தூர் மணியை விடுவிக்க வேண்டும் என்பதுதான் வீரப்பனின் முக்கியநிபந்தனையாக இருந்தது.
ஆனால் கர்நாடக அரசு மணியை விடுவிப்பதற்குக் கால தாமதம் செய்ததால் கொடுமைக்கு ஆளாகி என் கணவர்கொல்லப்பட்டார்.
இதுபோன்ற பொறுப்பற்ற அரசு இருக்கும் வரை யாருக்குமே நீதி கிடைக்காது. ஒரு முன்னாள் அமைச்சருக்கேஇந்தக் கதி என்றால், சாதாரண ஏழைகளுக்கெல்லாம் நீதி கிடைக்குமா?
என் கணவரை மீட்டுத் தரும்படி எத்தனையோ நாட்கள் கிருஷ்ணாவிடம் போய் நானும் என் பிள்ளைகளும்மன்றாடியுள்ளோம்.
ஒரு நாள் காலை 7.30 மணிக்கெல்லாம் நாங்கள் போய் கிருஷ்ணாவின் வீட்டில் காத்திருந்தோம். ஆனால் காலை11.45 மணிக்குத்தான் அவரைச் சந்திக்க அனுமதி கிடைத்தது.
ஆனால் இதை நான் அவமானமாகக் கருதவில்லை. என் கணவரை மீட்பதற்காக நடு ரோட்டில் கூட நின்று யாரைவேண்டுமானாலும் வேண்டிக் கொள்வதற்குத் தயாராக இருந்தேன்.
ஆனால் என் கணவரை மீட்பதில் முதல்வரும் அமைச்சர்களும் தொடர்ந்து அலட்சியம் காட்டி வந்தனர்.
கொடூரமானவர்களுக்கும் கூட கொஞ்சம் கருணை இருக்கும். ஆனால் கிருஷ்ணா எங்கள் மீது கருணையேகாட்டவில்லை. என் கணவரை மீட்பதற்கு அவர் எள்ளளவும் முயற்சிக்கவில்லை. மீட்பது போல் நன்றாகநாடகம்தான் ஆடினார் என்றார் பரிமளா.
வீரப்பன் சரணடைய தயார்?
இதற்கிடையே ஜனாதிபதி மன்னிப்பு அளித்தால் சந்தனக் கடத்தல் வீரப்பன் தயாராக உள்ளதாக கொள்ளேகால்ஐக்கிய ஜனதா தளத் தலைவர் பொன்னாச்சி மகாதேவசாமி கூறினார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் மகாதேவசாமி பேசுகையில்,
காட்டுக்குள் சென்று வீரப்பனை நான் சந்தித்தபோது, ஜனாதிபதி அப்துல் கலாம் கையெழுத்துப் போட்டு மன்னிப்புஅளிப்பதாகக் கடிதம் கொடுத்தால் நான் சரணடைவேன் என்று என்று அவன் கூறினான்.
முதல்வர் கிருஷ்ணா, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் இந்த மன்னிப்புக் கடிதத்தைப்பெறுவதற்கு முயற்சிக்க வேண்டும் என்றும் ஒருநாளும் நான் ஜெயிலில் இருக்க மாட்டேன் என்றும் வீரப்பன்என்னிடம் கூறினான்.
அரசியல் அமைப்புச் சட்டம் பற்றி எடுத்துக் கூறி, வழக்குகளைச் சந்திக்க வேண்டும் என்றும் ஜெயிலுக்குச் செல்லவேண்டும் என்றும் நான் கூறினேன்.
அதற்கு வீரப்பனோ, சங்கர் தயாள் சர்மா ஜனாதிபதியாக இருந்தபோது காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு மன்னிப்புகடிதம் கொடுத்து சரண் அடையச் செய்தாரே அதுபோல் எனக்கும் மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றுகூறியதாக மகாதேவசாமி கூறினார்.
-->


