For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொங்கல் கொண்டாட்டம்: உற்சாகமும் வேதனையும்..

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு இனிப்பும் கசப்புமாக இருந்தது. காவிரிப் படுகை மாவட்டங்களில் பொங்கல்மிகவும் டல் அடித்தது. ஆனால், மற்ற பகுதிகளில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

காலை 6.15 மணிக்குள் பொங்கலைப் பொங்குவது நல்லது என்று ஜோதிடர்கள் கூறி இருந்ததால் இன்று அதிகாலையேபெரும்பாலான மக்கள் பொஙகலைப் பொங்கினர்.

கிராமப் பகுதிகளில் வீட்டின் முன்பாகவும், தோட்டங்களிலும் மண் பானைகளில் கதிரவனை நோக்கி கிழக்கு முகம் பார்த்துவைக்கப்பட்ட மண் அடுப்புகளில் பாரம்பரியமாக பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கலையொட்டி கரும்பு விற்பனையும்பரபரப்பாக நடந்து வருகிறது.

பொங்கல், கரும்பு, மஞ்சள், வாழையை கதிரவனுக்குப் படைத்து பொங்கலே பொங்கல் என குலவையிட்டு இந்தத் திருநாள்கொண்டாடப்பட்டு வருகிறது. இட நெருக்கடி காரணமாக நகர்களில் வழக்கம்போல் கேஸ் ஸ்டவ்களில், குக்கர்களில் பொங்கல்வைக்கப்பட்டாலும் உற்சாகம் குறையாமல் மக்கள் பொங்கலைக் கொண்டாடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் அம்மன் ஆலம் முன் 501 பானைகளில் பெண்கள் பொங்கல் வைதது விழாகொண்டாடினர். இதனைக் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளும் கண்டுகளித்தனர்.

நீலகிரி மாவட்டத்தில் தோடர்கள், இருளர்கள் ஆகியோரின் கிராமங்களில் அவர்களது வனவாசிகள் நடனத்துடன் பொங்கல்கொண்டாடப்பட்டது. இதனைக் காணவும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் குவிந்திருந்தனர்.

அதே நேரத்தில் காவிரிப் படுகை மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், கடலூரின் சில பகுதிகளில் மிகபொங்கல் மிக டல்லாக இருந்தது. வீட்டில் அரிசியே இல்லாத நிலையில் இப் பகுதிகளின் லட்சக்கணக்கான விவசாயக்குடும்பங்கள் சோகத்துடன் தான் பொங்கலைக் கொண்டாடினர்.

அதே போல கோவை மாவட்டம் அவினாசி உள்ளிட்ட பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் பொங்கலேகொண்டாடப்படவில்லை.

ஜல்லிகட்டு ஏற்பாடுகள்:

மாட்டுப் பொங்கலையொட்டி மதுரை அலங்காநல்லூர், ராமநாதபுரம் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு நடக்கும்போதுஅசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்துவிடாமல் தடுக்குமாறு மாவட்ட எஸ்.பிக்களுக்கு டி.ஜி.பி. ராஜகோபலன்உத்தரவிட்டுள்ளார்.

காளைகள் ஓடவிடப்படும் பாதைக்கும் நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க வரும் மக்கள் நிற்கும் பகுதிக்கும் இடையே தடுப்புக்கட்டைகளை அமைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

󠣰 PQug ٶPlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X