அவமதிப்பு வழக்கு: திருச்சி நீதிமன்றத்தில் "நக்கீரன்" கோபால் ஆஜர்
திருச்சி:
புதுக்கோட்டை பாதியார் தொடர்ந்த அவமதிப்பு வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில்"நக்கீரன்" பத்திரிக்கையின் ஆசிரியர் கோபால் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் கலியமங்கலத்தைச் சேர்ந்தவர் பாதியார் குழந்தை சாமி. கடந்த 1998ம்ஆண்டு "நக்கீரன்" வார இதழில் இவர் குறித்த கட்டுரை வெளியாகியிருந்தது.
அதில் தன்னை அவமதிக்கும் வகையில் கோபால் எழுதியிருப்பதாகக் கூறி திருச்சி நடுவர்நீதிமன்றத்தில் குழந்தை சாமி வழக்குத் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்குவந்தது.
இதையடுத்து சென்னை சிறையிலிருந்து கோபால் நேற்று திருச்சி கொண்டு செல்லப்பட்டு அங்குள்ளசிறையில் அடைக்கப்பட்டார்.
பின்னர் இன்று காலை அவர் திருச்சி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கைவிசாரித்த நீதிபதி மீண்டும் கோபாலை வரும் 19ம் தேதி ஆஜர்படுத்த வேண்டும் எனஉத்தரவிட்டார். இதையடுத்து சென்னை சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கோபால்.
கோபால் ஆஜர்படுத்தப்பட்டதையொட்டி திருச்சி நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.
கோபாலைச் சந்திக்க அவருடைய குடும்பத்தினரும், "நக்கீரன்" ஊழியர்களும் முயற்சித்தனர். ஆனால்அவர்களுக்குப் போலீசார் அனுமதி அளிக்காததைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையேலேசான "தள்ளு முள்ளு" ஏற்பட்டது.


