அமைதிப் பேச்சை மீண்டும் தொடங்க புலிகள் முயற்சி
கொழும்பு:
இலங்கை அரசுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் துவக்கும் முயற்சியில்விடுதலைப்புலிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
வடகிழக்கு இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவத்தை நீக்க வேண்டும் என்று பல மாதங்களாகக்கோரிக்கை விடுத்தும் கூட இலங்கை அரசு அதைக் கண்டு கொள்ளாததால் பேச்சுவார்த்தையைப்புறக்கணிப்பதாகப் புலிகள் அறிவித்திருந்தனர்.
இதுபோலவே மேலும் பல முக்கியமான தங்களுடைய கோரிக்கைகளை அரசு புறக்கணித்துவருவதாகவும் புலிகள் குற்றம் சாட்டினர். பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்பதோடு, அடுத்த மாதம்ஜப்பானில் நடைபெறவுள்ள நிதி திரட்டும் மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும்புலிகள் அறிவித்தனர்.
இதையடுத்து தாய்லாந்தில் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை. அடுத்த சுற்று பேச்சுவார்த்தைஎப்போது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்நிலையில் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளில் நார்வே தூதுக்குழுவினரும் பேச்சுவார்த்தை கண்காணிப்புக் குழுவினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதற்கிடையே லண்டனிலிருந்து இலங்கை வந்துள்ள புலிகளின் அரசில் ஆலோசகரான ஆன்டன்பாலசிங்கம் நார்வே தூதுக் குழுவினருடன் இன்று சில முக்கிய பேச்சுவார்த்தைகளைநடத்தியுள்ளார்.
நார்வே நாட்டின் துணை வெளியுறவுத் துறை அமைச்சர் விடார் ஹெல்கெசன், இலங்கைக்கானநார்வே நாட்டின் அமைதித் தூதர் எரிக் சோல்ஹைம், இலங்கைக்கான நார்வே தூதர் ஹான்ஸ்ப்ராட்ஸ்கர் ஆகியோரை இன்று காலை சந்தித்துப் பேசினார் பாலசிங்கம்.
அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் குறித்து அவர்களுடன்பாலசிங்கம் பேசியுள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தச் சந்திப்பு எங்கு நடைபெற்றது என்றவிவரம் வெளியிடப்படவில்லை.
இன்று அல்லது நாளை பாலசிங்கம் தன்னுடைய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்திப்பார்என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது அமைதிப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதுகுறித்து இருவரும் பேசுவார்கள் என்று தெரிகிறது.
இதற்கிடையே நார்வே குழுவினரும் இலங்கைக்கான ஜப்பானின் சிறப்புத் தூதர் யாசுஷிஅகாஷியும் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயைச் சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துவிவாதித்தனர்.


