மதுரை மாணவி கொலை வழக்கு: கைதான இலங்கை வாலிபர் குறித்து திடுக்கிடும் தகவல்
மதுரை:
இலங்கையைச் சேர்ந்த மாணவி மயூரணி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மாணவர்பாலபிரசன்னா ஏற்கனவே அந்நாட்டில் தன்னைக் காதலிக்க மறுத்த பெண்ணின் கையைஅரிவாளால் வெட்டியவர் என்பது தெரிய வந்துள்ளது.
மதுரை அண்ணா நகர் அம்பிகா கலைக் கல்லூரியில் படித்து வந்த இலங்கை மாணவி மயூரணி,அவர் தங்கியிருந்த கலைக் கல்லூரி உரிமையாளர் சோலமலைத் தேவர் வீட்டிலேயே பிணமாகக்கண்டெடுக்கப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக சோலமலைத் தேவர், அவரது மனைவி ராக்கம்மாள், இலங்கைதிரிகோணமலையைச் சேர்ந்த மாணவர் பாலபிரசன்னா, வாட்ச்மேன் வீரண்ணன் மற்றும் மதுரைஎல்.ஐ.சி. காலனியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இதில் பாலபிரசன்னா குறித்து பல திடுக்கிடும்தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலபிரசன்னா திரிகோணமலையில் இருந்தபோது ஒரு பெண்ணை ஒருதலையாகக்காதலித்துள்ளார். ஆனால் அப்பெண்ணோ பாலபிரசன்னாவை ஏற்கவில்லை. இதனால்
ஆத்திரமடைந்த பாலபிரசன்னா அந்தப் பெண்ணின் கையை வெட்டியுள்ளார்.
இதன் பிறகு அவர் அங்கிருந்து மதுரைக்கு வந்து விட்டார். தான் ஆதரவற்றவன் என்று கூறிசோலமலைத் தேவர் வீட்டில் தஞ்சமடைந்து படித்து வந்தார் பாலபிரசன்னா.
தற்போது கைதாகியுள்ள 5 பேரையும் போலீஸ் காவலில் எடுக்க மதுரை நீதிமன்றத்தில் போலீஸ்தரப்பில் மனு செய்யப்பட்டுள்ளது. போலீஸ் காவலில் எடுத்த பிறகு மேலும் பல திடுக்கிடும்தகவல்கள் வெளியாகும் என்று தெரிகிறது.


