For Daily Alerts
Just In
இன்று சூரிய கிரஹணம்: வட இந்தியாவில் தெரிந்தது
டெல்லி:
இந்த நுற்றாண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று காலை ஏற்பட்டது. வட இந்தியாவின் பல பகுதிகளிலும் இதைப்பார்க்க முடிந்தது.
இன்று காலை சரியாக 7.30 மணியிலிருந்து 8.39 வரை தோன்றிய இந்த சூரிய கிரஹணத்தையொட்டி பல்வேறுபுனித நதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினர்.
டெல்லி, ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், ஆக்ரா மற்றும் ஹரியான மாநிலங்களில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடிந்தது.
இந்தியாவில் தென்படும் இந் நூற்றாண்டின் முதல் சூரிய கிரகணம் இது தான் என டெல்லி நேரு கோளரங்கம்கூறியுள்ளது.
கிரகணத்தின்போது புனித நீராடினால் முக்தி அடையலாம் என்பது நம்பிக்கை. இதனால் குருஷேத்ராவில் புனிதநீராடுவதற்கு மக்கள் 5 கி.மீ. வரை வரிசையில் நின்றிருந்தனர்.
நம் நாட்டில் 20 சதவீகிதம் தான் தெரியும். உலகில் மற்ற இடங்களில் தெளிவாக தெரிய வாய்ப்புள்ளது.


