For Daily Alerts
Just In
முஸ்லீம் பாதுகாப்புப் படையினர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது
சென்னை:
முஸ்லீம் பாதுகாப்புப் படை என்ற அமைப்பைச் சேர்ந்த 3 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜாகிர் உசேன் என்ற ஜாகிர் என்றஜக்காரியா, நிஜாமூதீன், அப்துல் காதிர் என்ற முகம்மது அப்துல் காதிர் ஆகிய 3 பேரும் தற்போதுகடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
3 பேரும் சென்னை நகரில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டடங்கள், கோவில்களைத்தகர்க்கவும் இந்து தலைவர்களைக் கொல்லவும் திட்டமிட்டிருந்ததாக போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், இந்த செயல்களுக்காக பல்வேறு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளின் நிதி உதவியையும்இவர்கள் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கைதாகி இருந்த இந்த மூவரும் இப்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உள்ளேதள்ளப்பட்டுள்ளனர்.


