For Daily Alerts
Just In
மதிமுகவை யாராலும் தடை செய்ய முடியாது: செஞ்சி ராமச்சந்திரன்
வேலூர்:
மதிமுக மாபெரும் மக்கள் சக்தி இயக்கம். அந்த இயக்கத்தை தடை செய்ய யாராலும் முடியாது என்றுமுன்னாள் மத்திய அமைச்சர் செஞ்சி ராமச்சந்திரன் கூறினார்.
தமிழகத்தில் பொடா சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு வருவதாக பெரும்பாலான கட்சிகள் புகார்கூறி வருகின்றன. எனவே பொடா மறு ஆய்வுக் கமிட்டியின் முடிவுகளை விரைவில்வெளியிடுமாறு மத்திய அரசை மதிமுக வலியுறுத்தும்.
தமிழர் விடுதலை இயக்கத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதை, மதிமுகவுக்கு விடுக்கப்பட்டஎச்சரிக்கையாகக் கருத முடியாது. மதிமுக சாதாரண அரசியல் கட்சி அல்ல, மாபெரும் மக்கள் சக்திஇயக்கம். அதை தடை செய்ய யாராலும் முடியாது என்றார் அவர்.


