நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் ஜனனி: சிறையில் போலீஸ் கொடுமை என புகார்
மதுரை:
சசிகலாவின் கணவர் நடராஜனுக்குக் நெருக்கமாக இருந்ததால், கஞ்சா வைத்திருந்ததாக செய்யப்பட்டுள்ளமதுரைப் பெண் ஜனனி இன்று மதுரை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது, போலீசாரால் கைது தன்னை போலீஸார் வயிற்றில் உதைத்துக் கொடுமைப்படுத்தியதாக நீதிபதிசம்பத்குமாரிடம் ஜனனி புகார் கூறினார்.
மதுரை அன்பு நகரைச் சேர்ந்த ரெஜீனா மற்றும் அவரது மகள் ஜனனியை, கஞ்சா கடத்தியதாகவும், வருமானத்தைமீறி ரூ. 1.4 கோடி பணம் வைத்திருந்தாகவும் கூறி போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களது கார் டிரைவர்சுரேசும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர்கள் மூவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் கஞ்சா ஏதும் கடத்தவில்லை என்றும், நடராஜன் தந்த பணத்தைத் தான் வைத்திருந்தனர் என்றும்கூறப்படுகிறது. மேலும் ஜனனி நடராஜனுக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளார். இருவரும் ரகசிய திருமணம் கூடசெய்து கொண்டதாக தகவல்கள் வருகின்றன.
நடராஜனுக்கு நெருக்கமான முன்னாள் எம்.எல்.ஏ. இந்தப் பெண்களை சிறையில் பலமுறை சந்தித்துவிட்டுத்திரும்பியுள்ளார். இவர்களுக்கு நடராஜன் கோடிக்கணக்கில் பணமும், நகைளும், வீடுகளும் வாங்கித் தந்ததாகதினந்தோறும் பத்திரிக்கைகளில் பூகம்ப செய்திகள் வருகின்றன.
நடராஜனின் தம்பி பெயரில் வாங்கப்பட்ட ஹூயூண்டாய் அசென்ட் காரை இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர்.இப்போது இந்தக் காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பெண்கள் விவகாரத்தில் நடராஜனின் வீடு, அலுவலகத்திலும் ரெய்ட் நடந்துள்ளது. அவரிடமும்விசாரணை நடந்துள்ளது. நடராஜனைக் கைது செய்ய முதல்வர் தயாராக இருந்தாலும் சசிகலா அதைத் தடுப்பதாகநக்கீரன் கூறுகிறது.
இந் நிலையில் நாளையுடன் ஜனனி, ரெஜீனா மற்றும் டிரைவர் சுரேஷின் நீதிமன்றக் காவல் முடிவடைகிறது. இதைத்தொடர்ந்து காவல் நீட்டிப்புக்காக பலத்த பாதுகாப்புடன் திருச்சி சிறையிலிருந்து கொண்டு வரப்பட்ட அவர்கள்மதுரை போதைத் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
நீதிமன்ற வளாகத்தில் ஜனனி மற்றும் ரெஜீனாவை புகைப்படம் எடுக்க போலீஸார் அனுமதிக்கவில்லை.செய்தியாளர்களையும், புகைப்படக்காரர்களையும் போலீஸார் நெட்டித் தள்ளினர். அவர்களைக் காணஆயிரக்கணக்கான பொதுமக்களும் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்ததால் அங்கு நூற்றுக்கணக்கான போலீஸார்குவிக்கப்பட்டனர்.
ஜனனி ஆஜர் செய்யப்பட்டபோது நீதிமன்ற அறையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. உடனே நீதிபதிவக்கீல்கள் தவிர மற்ற அனைவரும் அறையை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார். அதன் பின்னர் கோர்ட்டில்இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டனர். வக்கீல்கள் சிலரையும் போலீசார் வெளியேற்றினர்.
நீதிபதியிடம் பேசிய ஜனனி, நான் உங்களிடம் சில வார்த்தைகள் கூற விரும்புகிறேன். கருப்பாயூரணி போலீஸ்நிலைய இன்ஸ்பெக்டர் கணேசனை தவிர மற்ற அனைவரும் என்னை கீழ்தரமாக நடத்தினார்கள். சாந்தகுமாரிஎன்ற இன்ஸ்பெக்டர் என்னை காலால் வயிற்றில் எட்டி உதைத்தார். இதில் தனது வயிற்றில் ரத்தக் கசிவு ஏற்பட்டுசிறை வளாகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனக்கும் கஞ்சாவிற்கும் எந்த ஒரு சம்பந்தமும் கிடையாது. நான்கஞ்சாவை பார்த்தது கூட கிடையாது.
என் வழக்கறிஞர் சங்கரபாண்டியனுடன் சிறிது நேரம் பேச அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
பின்னர் கோர்ட்டிற்குள்ளேயே ஜன்னல் ஓரத்தில் நின்று ஜனனி மற்றும் அவர் தாயார் ரெஜீனாவுடன் வழக்கறிஞர்சங்கரபாண்டியன் பேசினார்.
அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் அடுத்த மாதம் 8ம் தேதி வரைகாவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.
அதன் பின்னர் ஜனனி, அவர் தாயார் பலத்த பாதுகாப்புடன் வேனுக்குள் அழைத்து சென்று ஏற்றப்பட்டு திருச்சிசிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அவர்களை படம் எடுக்க முயன்ற பத்திரிக்கையாளர்களை விரட்டுவதிலும்,தள்ளுவதிலுமே போலீசார் தீவிரமாக இருந்தனர்.
முன்னதாக இவர்களை கோர்ட்டில் ஆஜர் செய்யாமலேயே காவல் நீட்டிப்பு பெற காவல்துறை முயற்சி செய்தது.
அவர்களை கோர்ட்டுக்குக் கொண்டு வந்தால் செய்தியாளர்களிடம் ஏதாவது கூறி விடுவார்கள்,புகைப்படக்காரர்களின் கண்ணிலிருந்து தப்ப முடியாது என்பதால் நீதிமன்றத்துக்குக் கொண்டு வராமலேயே காவல்நீட்டிப்புப் பெற போலீஸார் முயன்றனர். ஆனால், அவர்களது முயற்சிகள் பலிக்கவில்லை. இதையடுத்துநீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.
- ஜனனி- நடராஜன் தொடர்புகள் குறித்து விசாரணை நடத்த கோரிக்கை
- மதுரை கஞ்சா பெண்கள்; ரூ. 1.4 கோடி பண விவகாரத்தில் நடராஜன்!!


