For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கண்களுக்கு விருந்தளித்த விமான சாகசம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Sukhoiதமிழகத்தின் முதலாவது விமானப் படை விமானங்களின் கண்கவர் சாகச நிகழ்ச்சி சென்னை மக்களைவியப்பிலும், பிரமிப்பிலும் ஆழ்த்தியது. பொதிகை டிவியின் நேரடி ஒளிபரப்பின் மூலம்தமிழகத்தின் பிற மக்களும் இதைக் கண்டு களித்தனர்.

தமிழகத்திலேயே முதல் முறையாக சென்னை மெரீனா கடற்கரையில், விமானப்படைவிமானங்களின் சாகச நிகழ்ச்சி இன்று காலை நடத்தப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா இந்தவிமானப்படை சாகச காட்சியை தொடங்கி வைத்தார்.

காலை 10 மணிக்குத் தொடங்கி சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த சாகச நிகழ்ச்சியை சென்னைநகரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் நேரடியாக கண்டுகளித்தனர்.

சுகோய்-30 ரக போர் விமானங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான விமானங்கள் இந்த சாகசநிகழ்ச்சியில் பங்கேற்று வானில் பல்வேறு சாகசங்களை செய்து காட்டி சென்னை மக்களின்கண்களுக்கு விருந்தையும், உள்ளத்தில் வியப்பையும் கொடுத்தன.

சுகோய்-30 ரக விமானங்களில் விண்ணில் விர்ரென்று காற்றைக் கிழித்துக் கொண்டு செய்து காட்டியசாகசங்கள், இரண்டு மிக்-29 ரக விமானங்களுக்கும், சுகோய் விமானங்களுக்கும் இடையே நடந்தபோர் தாக்குதல் ஒத்திகை பார்வையாளர்களுக்கு பெரும் திரில்லைக் கொடுத்தன.

அதேபோல, 9 சூர்யா கிரண் விமானங்கள் செய்து காட்டிய ஏரோபாட்டிக்ஸ் பார்வையாளர்களுக்கபெரும் உற்சாகத்தைக் கொடுத்தன.

ஜாகுவார் போர் விமானங்களும் பார்வையாளர்கள் மனதைக் கவர்ந்தன. அதுமட்டுமல்லாது, 20பேர் கொண்ட பாராசூட் குழுவினர் விமானங்களிலிருந்து குதித்து பரவசப்படுத்தினர்.

மொத்தம் 50 விமானங்கள் இந்த சாகச நிகழ்ச்சியில் பங்கேற்றன. பெங்களூர், புனே மற்றும்சென்னை தாம்பரம் விமானப்படை நிலையங்களிலிருந்து இந்த விமானங்களவரவழைக்கப்பட்டிருந்தன.

முதல்வர் ஜெயலலிதா கொளுத்துதம் வெயிலையும் பொருட்படுத்தாமல் சாகச நிகழ்ச்சிமுழுவதையும் ரசித்துப் பார்த்தார். சுகோய் விமானங்கள் செய்து காட்டிய சாகசங்களை கை கொட்டிரசிக்கவும் அவர் தவறவில்லை. அவருடன் விமானப்படை தலைமை தளதி ஏர் சீப் மார்ஷல்கிருஷ்ணமூர்த்தியும் அமர்ந்து சாகச நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

இன்றைய விமான சாகச நிகழ்ச்சியில் சுகோய் ரக விமானங்கள்தான் பார்வையாளர்களைை மிகவும்கவர்ந்தன. விண்ணில் வட்டமடித்தும், கீழே விழுவது போல வேகமாக வந்து அதே வேகத்தில்மேலே கிளம்பியது, பார்வையாளர்களின் மனதில் திக் திக்கை ஏற்படுத்தியது.

ரஷ்ய தயாரிப்பான சுகோய் ரக போர் விமானங்கள், மெதுவாக செல்லும்போது மணிக்கு 250கிலோமீட்டர் வேகத்திலும், வேகமாக செல்லும்போது மணிக்கு 2500 கிலோமீட்டர் வேகத்திலும்செல்லக் கூடியவை.

தூர்தர்ஷனின் பொதிகை அலைவரிசை இந்த விமான சாகச நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்புசெய்ததால், தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களும் இந்த சாகசத்தை நேரடியாக காணும் வாய்ப்புஏற்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X