• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு: அரசு- போலீஸ்- அதிமுகவினருக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்

By Staff
|

சென்னை:

தர்மபுரியில் அதிமுகவினரால், வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் சென்ற பஸ் எரிக்கப்பட்டு, 3 மாணவிகள்உயிரோடு கருகி இறந்த வழக்கை, அதிமுகவுக்கு சாதகமாக போலீசார் நடத்தி வருவதற்கு சென்னைஉயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த வழக்கை சேலம் நீதிமன்றத்திற்கு மாற்றவும், விசாரணையை ஆரம்பத்திலிருந்து மீண்டும் நியாயமாகநடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

கடந்த முறை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது செய்த ஊழல்கள் தொடர்பான வழக்குகள் சிறப்புநீதிமன்றங்களில் நடந்து வந்தன. அப்போது பிளசன்ட் ஸ்டே ஹோட்டலை வாங்கியது தொடர்பான வழக்கில்ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

2000மாவது ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி இந்த உத்தரவு வெளியானது. இதையடுத்து அதிமுகவினர் மாநிலம்முழுவதும் பெரும் அராஜகத்தில் ஈடுபட்டனர். தமிழகம் எங்கும் அதிமுகவினர் வன்முறையில் இறங்கினர்.

அப்போது கோவை வேளாண்மை கல்லூரி மாணவ, மாணவிகள் தர்மபுரியில் கல்விச் சுற்றுலாவுக்காகவந்திருந்தனர். அதை முடித்துக் கொண்டு தங்களது பேருந்தில் கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அந்தப் பேருந்தை தர்மபுரி அருகே உள்ள இலக்கியம்பட்டி என்ற இடத்தில் அதிமுகவினர் தடுத்து நிறுத்தினர்.உள்ளே மாணவ, மாணவிகள் இருப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் பஸ்சின் டேங்கை உடைத்து அதிலிருந்தடீசலை எடுத்து பஸ் மீது தெளித்து அதற்குத் தீ வைத்தனர்.

சுற்றிலும் வன்முறைக் கும்பல் நின்றிருந்ததால் பஸ்சில் இருந்து இறங்க பயந்து கொண்டிருந்த மாணவிகள், என்னநடக்கிறது என்பதை உணரும் முன்பாக பஸ் முழுமையாகத் தீப்பிடித்துக் கொண்டது.

இதையடுத்து அலறியடித்துக் கொண்டு மாணவிகள் ஜன்னல்கள் வழியே வெளியே குதித்தனர்.

ஆனால், இந்த கோர சம்பவத்தில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 இளம் மாணவிகள் உயிருடன்பஸ்சுக்குள்ளேயே கருகி கட்டைகளாக விழுந்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தில் அதிமுகவினர்முதலில் தப்பிச் செல்ல போலீசாரால் அனுமதிக்கப்பட்டனர்.

இச் சம்பவத்துக்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்ததால் வேறு வழியின்றி பஸ்சுக்கு தீ வைத்தநாய்கள் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக தர்மபுரி கிராம நிர்வாக அதிகாரியிடம் புகாரை வாங்கிக்கொண்டு அதிமுகவினர் மீது போலீசார் வழக்கைப் பதிவு செய்தனர்.

கிருஷ்ணகிரியில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. ஆனால், வழக்கைபோலீசார் முறையாக நடத்தவில்லை. மேலும் சாட்சிகளையும் அதிமுகவினர் பல்டி அடிக்க வைத்தனர். சாட்சிகளாகசேர்க்கப்பட்ட 22 பேரும் பல்டி அடித்து அதிமுகவினருக்கு ஆதரவாக சாட்சி கூறினர். இது நீதிமன்றவரலாற்றிலேயே இதுவரை நடந்திராத அபூர்வமான நிகழ்வாகும்.

இதற்குக் காரணம் கேடு கெட்ட தர்மபுரி போலீசாரும், பஸ் எரித்த கேவலமான அதிமுக கும்பலும் தான். ஆளும்கட்சியினரான அதிமுகவினரிடம் பணமும் கோழி பிரியாணியும் வாங்கித் தின்றுவிட்டு வழக்கை அவர்களுக்குஆதரவாக நடத்தி வந்தனர்.

இதனால் அதிமுகவினர் ஜாமீனில் விடுதலையாகினர். மேலும் அந்தக் கும்பல் இந்த வழக்கில் இருந்து தப்பிவிடும்சூழலும் எழுந்துள்ளது.

இந் நிலையில் எரித்துக் கொல்லப்பட்ட மாணவியான கோகிலவாணியின் தந்தை வீராசாமி, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அதில், பஸ் எரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அதிமுகவினர். இந்தக் காரணத்தால்,சாட்சிகள் 22 பேரையும் திசை திருப்பி, பொய் சாட்சியம் சொல்ல வைத்துள்ளனர். வரலாறு காணாத வகையில் 22பேரும் பொய் சாட்சியம் சொல்லியுள்ளனர்.

இவர்களில் பொறுப்பான பதவியில் உள்ள கிராம நிர்வாக அதிகாரியும் (வி.ஏ.ஓ.) அடங்குவார்.

அதிமுகவினர் மீதான வழக்கு என்பதால் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் விசாரணை பராபட்சமின்றி நடக்கும் என்றுஎதிர்பார்க்க முடியாது. எனவே, கோவையிலுள்ள வேறு ஒரு நீதிமன்றத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும். இந்தவழக்கில் உண்மைக் குற்றவாளிகள் தப்பிவிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரியிருந்தார்எரித்துக் கொல்லப்பட்ட மாணவியின் தந்தை.

மனுவைப் பரிசீலித்த நீதிபதி நீதிபதி கனகராஜ், அரசுக்கும் போலீசாருக்கும் மிகக் கடுமையான டோஸ் விட்டார்.

விசாரணை என்ற பெயரில் தர்மபுரி நீதிமன்றத்தில் அரசும், போலீசும், அதிமுகவினரும் கேலிக்கூத்து நடத்திவருவதாகக் கூறிய நீதிபதி, அரசு வழக்கீலும் அரசுத் தரப்பும் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால் இந்தவழக்கே தோற்கடிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.

நீதிமன்றத்தையே நீங்கள் கேலிப் பொருளாக்கி விட்டீர்கள் என கோபத்துடன் கூறிய நீதிபதி, இதுவரை தர்மபுரிநீதிமன்றத்தில் நடந்த விசாரணையை ரத்து செய்ய உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்கை சேலத்தில் உள்ள முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றவும் நீதிபதி கனராஜ்உத்தரவிட்டார்.

அவரது அதிரடி தீர்ப்பு விவரம்:

இந்த வழக்குக்கு முன்னுரிமை கொடுத்து விரைவில் விசாரிக்கவும் சேலம் நீதிமன்றத்திற்கு உத்தரவிடுகிறேன்.

அரசுப் பணியாளராக இருந்தும், பொறுப்பே இல்லாமல் நீதிமன்றத்த்ல பொய் சாட்சி கூறிய அளித்த கிராம நிர்வாகஅதிகாரி ராமசுந்தரம் மற்றும் உதவியாளர் சாமுண்டி ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிடுகிறேன். அவர்கள்மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இந்த வழக்கை தர்மபுரி மாவட்ட காவல்துறைக்கண்காணிப்பாளர் பதிவு செய்ய வேண்டும்.

ராமசுந்தரத்தை உடனடியாக சஸ்பெண்ட் செய்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்டகலெக்டருக்கு உத்தரவிடுகிறேன். அதிமுகவினருக்காக பொய் சாட்சி சொனன இந்த அரசு ஊழியர்களின் செயல்வெட்கரமானது, கீழ்த்தரமானது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் அதிமுகவினர் என்பதால், இந்த வழக்கை அப்படியே கிடப்பில்போட்டுள்ளனர் போலீஸார். அநாதைக் குழந்தை போல இந்த வழக்கை போலீஸ் பாவித்துள்ளது எனக்கு வேதனைதருகிறது.

ஒட்டுமொத்தமாகவே போலீஸார் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையைக் குலைக்கும் வகையில் தர்மபுரிபோலீஸார் நடந்து கொண்டுள்ளனர்.

சாட்சிகளை பல்டி அடிக்க வைத்து, அதிமுகவினருக்கு ஆதரவாக பொய் சாட்சி சொல்ல வைத்த கூடுதல் டிஎஸ்பிமீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க சிபிசிஐடி ஐ.ஜிக்கு உத்தரவிடுகிறேன். தர்மபுரி போலீசார் நடந்து கொண்டமுறை இமாயலத் தவறாகும். இதற்கு மாநில உள்துறைச் செயலாளர் சையத் முனீர் ஹோதா மற்றும் சிபிசிஐடி கூடுதல்எஸ்.பியையும் இந்த நீதிமன்றம் கண்டிக்கிறது.

சேலம் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கின் விசாரணை மீண்டும் ஆரம்பத்தில் இருந்தே நடக்க வேண்டும்.வழக்கைக் கையாள பொறுப்பான, மனசாட்சி மிக்க ஒரு அதிகாரியை மாவட்ட எஸ்.பி. நியமிக்க வேண்டும்.

மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பில் இனிமேல் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகக் கூடாது. (இவர் தான்அதிமுகவினருக்கு ஆதரவாக வழக்கைத் திருப்பியவர்). அவருக்குப் பதிலாக இந்த வழக்கை நடத்த சேலம்வழக்கறிஞர்கள் சங்க மூத்த வழக்கறிஞர் ஆர்.சீனிவாசனை இந்த நீதிமன்றம் நியமிக்கிறது.

இவ்வாறு பரபரப்பான தீர்ப்பை வழங்கினார் நீதிபதி கனகராஜ்.

மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட இதே கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் தான் சமீபத்தில்முதல்வர் ஜெயலலிதாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது என்பது நினைவுகூறத்தக்கது. Mail this to a friend  Post your feedback  Print this page 

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X