For Quick Alerts
For Daily Alerts
Just In
மேலூர் குண்டுவெடிப்பு: ஹைதர் அலி விடுதலை
மதுரை:
மேலூர் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஹைதர் அலி உள்ளிட்ட 3 பேரை மதுரை நீதிமன்றம்விடுதலை செய்தது.
கடந்த 1991ம் ஆண்டு ஜூலை மாதம் மேலூர் அருகே உள்ள ஓவமலை என்ற இடத்தில் குண்டுகள் வெடித்தன.இது தொடர்பாக ஹைதர் அலி, இமாம் அலி, அக்பர், அப்துல் சலீம் ஆகியோர் மீது போலீஸார் வழக்குத்தொடர்ந்தனர்.
இவர்களில் இமாம் அலி பெங்களூரில் தமிழக போலீசார் நடத்திய எண்கெளன்டரில் கொல்லப்பட்டார்.
மதுரை முதலாவது விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் ஹைதர் அலிஉள்ளிட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்படாத காரணத்தால் அவர்களை விடுதலை செய்வதாகநீதிபதி உதயன் தீர்ப்பளித்தார்.


