For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

300 பெண்களின் தாலிகளுடன் கோவில் பூசாரி எஸ்கேப்!

By Staff
Google Oneindia Tamil News

கடலூர்:

மாங்கல்ய பூஜை என்ற பெயரில் 300க்கும் மேற்பட்ட பெண்களிடம் தாலியை வாங்கிய கோவில் பூசாரி அவற்றைஅடகு வைத்து விட்டு லட்சக்கணக்கான பணத்துடன் தலைமறைவாகி விட்டார்.

கடலூர் மாவட்டம் வடலூல் சீதாராமன் கோவில் உள்ளது. இந்தக் கோவில் பூசாரியாக இருந்து வந்தவர் லட்சுமிநரசிம்மன். இவர் கோவிலுக்கு வரும் பெண்களிடம், ராமர் பாதத்தில் உங்களது தாலிகளை 48 நாட்கள் வைத்துபூஜை செய்தால், தோஷம் அனைத்தும் விலகி சுபிட்சம் பெறுவீர்கள் என்று கூறியுள்ளார்.

பூசாரியே சொல்லியதால் பெண்கள் தங்களது தாலிகளை கழற்றிக் கொடுத்துள்ளனர். கழுத்தில் மஞ்சளைக் கட்டிக்கொண்டனர். தாலிச் சரடும் தங்கத்தில் இருந்தால் அவற்றை செயின்களோடு சேர்த்து வாங்கியுள்ளார். இதில்பெரும்பாலான பெண்கள் தங்களது கணவருக்குத் தெரியாமல் தாலியைக் கழற்றித் தந்துள்ளனர்.

தாலியைத் தர தயங்கிய பெண்களிடம், கணவருக்கு தோஷம் இருப்பதாகவும் பூஜை செய்யாவிட்டால்அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்றும் மிரட்டியுள்ளார். இப்படியாக சுமார் 300 பெண்களில் பல சைஸ்களில்மாங்கல்யத்தை வாங்கியுள்ளார்.

இந்தத் தாலிகளுக்கு பூஜை நடப்பதாக பூசாரி கூறியதால், தினமும் பெண்கள் வந்து அவர் தந்த பூவை மட்டும்வாங்கிச் சென்றனர். நெடுநாட்களாக பூஜை நடப்பதாகவே அவர் கூறிக் கொண்டிருந்தால் சந்தேகமடைந்த சிலபெண்கள் தங்களது கணவன்மார்களிடம் விஷயத்தைக் கூற, அவர்கள் பூசாரியின் வீட்டுக்குள் புகுந்து தர்ம அடிதந்து தாலியை மீட்டுச் சென்றுள்ளனர்.

இந் நிலையில் திடீரென்று பூசாரி லட்சுமி நரசிம்மனின் பூட்டிக் கிடந்தது. தனது குடும்பத்துடன் அவர்தலைமறைவாகியிருந்தார்.

அப்போது தான் அவர் 300 தாலிகளுடன் எஸ்கேப் ஆனதும், அந்தத் தாலிகளை ஒரு அடகுக் கடையில் வைத்துபணம் பெற்றுக் கொண்டு ஊரை விட்டு காலி செய்ததும் தெரியவந்தது.

தாலியைக் கழற்றிக் கொடுத்தவர்களில் நெய்வேலி மின் கழக உயர் அதிகாரிகள் சிலரின் மனைவிகளும் அடக்கம்என்று கூறப்படுகிறது. அந்த அடகுக் கடை ஆசாமிக்கும் பூசாரிக்கும் லிங்க் இருக்கலாம் என்று தெரிகிறது.

தங்களது கணவர்களுக்கு இந்த விஷயம் தெரியாது என்பதால், இதுவரை தாலியை இழந்த பெண்கள் யாரும்நேரடியாக காவல் நிலையத்தில் புகார் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசாரும் எந்தநடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.

புகார் வந்தால் தான் நாங்கள் ஏதாவது செய்ய முடியும் என்கின்றனர் போலீசார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X