For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்மா குளறுபடிகள்: நடக்கவே முடியாதவர் ஊர்வலம் போனதாக டிஸ்மிஸ்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 6,072 அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் இன்று கோவைமாவட்டத்தைச் சேர்ந்த 198 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி டிஸ்மிஸ் மற்றும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களிடம் 3நீதிபதிகள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. தலைமைச் செயலக ஊழியர்களிடம் முதல்கட்டமாகவிசாரணை நடந்தது.

இன்று முதல் கோவை மாவட்ட ஊழியர்களிடம் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம்டிஸ்மிஸ் செய்யப்பட்ட 900 பேரில் இன்று 198 பேடம் விசாரணை நடக்கிறது. இதில் வைத்தியநாதன் என்ற இருகால்களும் ஊனமுற்ற ஊழியரும் அடங்குவார். இவரால் நிற்கவோ, நடக்கவோ முடியாகது. ஆனால், இவரைப்போய் அரசுக்கு எதிராக ஊர்வலம் சென்றதாக இவரை போலீசார் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து நீதிபதியிடம் புகார் கூறிய வைத்தியநாதன், அரசு ஊழியர்கள் ஊர்வலம் சென்ற பாதையில் டிராபிக்ஜாம் ஏற்பட்டது. அப்போது நான் வீட்டுக்குப் போக சாலையில் நின்று கொண்டிருந்தேன். அப்போது என்னையும்கைது செய்து விட்டனர்.

என்னால் நடக்கவோ, ஓடவோ முடியாது என்பதால் போலீஸாரிடமிருந்து தப்ப முடியாமல் கைதுசெய்யப்பட்டேன். சஸ்பெண்ட் ஆகி சம்பளம் இல்லாமல் ரொம்பவும் கஷ்டப்படுகிறேன். எனக்கு மெடிக்கல்ஷாப்பில் ரூ. 900 கடன் பாக்கி உள்ளது. பால் பாக்கி ரூ. 1,800 உள்ளது. நாளை நான் ஓய்வு பெற உள்ளேன் எனநீதிபதியிடம் கூறியதாக பின்னர் நிருபர்களிடம் வைத்தியநாதன் தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஊழியர்களைத் தொடர்ந்து வரும் 6ம் தேதி முதல் தஞ்சாவூர் மாவட்ட ஊழியர்களிடம்விசாரணை நடக்கவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X