For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமர் தலைமயிலான காவிரி ஆணையத்தை கலைத்துவிடக் கோரி பொது நல வழக்கு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

காவிரி நதி நீர் ஆணையத்தையே கலைத்துவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்குத்தொடரப்பட்டுள்ளது.

பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான காவிரி ஆணையத்தை செல்லாத அமைப்பாக அறிவித்து அதைக் கலைக்கஉத்தரவிட வேண்டும் என்று அதில் கோரப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கருப்பன் இந்த ரிட் மனுவை தாக்கல் செய்தார். இதை விசாரணைக்கு ஏற்றதலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி மற்றும் நீதிபதி குலசேகரன் ஆகியோர், சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ்அனுப்ப உத்தரவிட்டனர்.

இதையடுத்து காவிரி ஆணையம், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக பொதுப் பணித்துறை செயலாளர்ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. காவிரி நதி நீர் ஆணையத்தின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர்ஜெனரல் வி.டி.கோபாலன் நோட்டீஸைப் பெற்றுக் கொண்டார்.

தனது பொது நல மனுவில் வழக்கறிஞர் கருப்பன் கூறியுள்ளதாவது:

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் விடக் கோரி நடுவர் மன்றம் உத்தரவிட்டும் கர்நாடகம் அதைநிறைவேற்றவில்லை. இதனால், கர்நாடக அரசை 356 மற்றும் 365வது சட்டப் பிரிவுகளின் கீழ் டிஸ்மிஸ் செய்யவேண்டும். இது தொடர்பாக நான் ஏற்கனவே இதே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளேன்.

காவிரி நதி நீர் பிரச்சினையைக் கையாள நடுவர் மன்றம், நதி நீர் ஆணையம் என இரு அமைப்புகள்தேவையில்லை. இரண்டுமே ஒரே விவகாரத்தைத் தான் கையாள்கின்றன.

ஆணையத்தின் தலைவராக பிரதமர் இருந்து வருகிறார். ஆனாலும், எந்தப் பலனும் ஏற்படவில்லை. ஆணையம்சொல்வதை கர்நாடகம் கேட்பதும் இல்லை. இந்த ஆணையம் அமைக்கப்பட்டதே அரசியல் சட்டத்துக்குமுரணானது.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் கூட நிறைவேற்றாமல் அரசியல் சட்ட நியதிகளையே கர்நாடகம் காற்றில் பறக்கவிட்டுள்ளது. அரசியல் காரணங்களுக்கா பிரதமரும் கர்நாடகத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.விவசாயிகளின் துயரைக் கூட கருத்தில் கொள்ளாமல், காவிரி ஆணையத்தைக் கூட்டாமல், பிரதமர் வெளிநாடுசென்றுவிட்டார்.

நீதிமன்றம் மூலம் கிடைக்க வேண்டிய நியாயத்தை அரசியல்வாதிகளிடம் ஒப்படைக்க முடியாது. பிரதமர்தலைமையிலான ஆணையமோ, நீதிமன்றம் மற்றும் நடுவர் மன்றத்துக்கும் மேலானதாக இருப்பது போலகாட்டப்பட்டு வருகிறது.

இருந்தாலும் இந்த ஆணையம் இதுவரை உருப்படியான முடிவு எதையும் எடுத்ததில்லை. நடுவர் மன்ற இடைக்காலஉத்தரவுகளை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் ஆணையம் ஆர்வமே காட்டுவதில்லை.

எனவே, பிரதமர் தலைமையிலான இந்த பயனில்லாத ஆணையத்தை முடக்க வேண்டும். நடுவர் மன்றம் அளித்தஇடைக்கால உத்தரவுகளை கர்நாடக அரசு உடனடியாக நிறைவேற்ற உத்தரவிட வேண்டும்.

கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, நடுவர் மன்றத்தின் உத்தரவுகளை மட்டுமல்லாமல், உச்ச நீதிமன்றம்பிறப்பிக்கும் உத்தரவுகளையும் துச்சமென மதித்து அவமரியாதை செய்து வருகிறார். இதை இப்படியேஅனுமதித்தால் நாட்டின் அரசியல் சட்டமே கேள்விக்குறியதாகி விடும், கேலிக்குரியதாகி விடும்.

எனவே அரசியல் சட்டத்தின் 365வது பிரிவைப் பயன்படுத்தி கர்நாடகத்தின் கிருஷ்ணராஜசாகர் அணைக்கட்டில்இருந்து நீரைத் திறந்துவிட உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கருப்பன் தனது மனுவில் கூறியுள்ளார்.

மனுவை ஏற்ற நீதிபதிகள் விசாரணையை அக்டோபர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

காவிரி நதி நீர் ஆணையத்தின் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் வி.டி.கோபாலன் நோட்டீஸைப் பெற்றுக்கொண்டார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X