For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி மகிழ்ச்சி, வைகோ வரவேற்பு, சுவாமி சந்தோஷம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை கர்நாடக மாநிலத்திற்கு மாற்றியதன் மூலம், தமிழகநீதிமன்றத்தில் அதிமுகவின் அரசியல் குறுக்கீடுகள் இருப்பது அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டத்தை வளைக்க ஜெயலலிதா முயற்சித்ததை உச்ச நீதிமன்றம் தடுத்து நிறுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.

ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாற்றியது குறித்துநிருபர்களிடம் இன்று கருணாநிதி கூறியதாவது:

நீதித் துறையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு, சாட்சியங்களை விலைக்கு வாங்கி, அதிகாரிகளைமிரட்டி, நீதியையே வளைத்து தனக்கு சாதகமாக தீர்ப்பு பெற ஜெயலலிதா செய்த முயற்சிகளை உச்ச நீதிமன்றத்தில்திமுக பகிரங்கமாக வெளிப்படுத்தியது.

ஜெயலலிதா மீதான வழக்கில் தமிழக தனி நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்காது என்ற திமுகவின் நிலையை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்கவேயில்லை.

இப்போது கர்நாடகத்துக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுவிட்டதால், நீதிமன்ற செயல்பாட்டில் ஜெயலலிதாவின்அரசியல் தலையீடும் தடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மட்டுமல்ல, தனக்கு எதிரான எல்லா வழக்குகளிலுமே ஜெயலலிதா அரசியல்ரீதியில் தலையிட்டுவருகிறார். ஆனால், எல்லா நீதிபதிகளும் அதற்கு அடிபணியவில்லை என்பதை வழங்கப்பட்டு வரும் தீர்ப்புகள்தெளிவாக்குகின்றன. உச்ச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கையின் மூலம் இனிமேல் ஜெயலலிதா இஷ்டத்துக்குவழக்குகளை வளைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகள் தமிழகத்தில் நடத்தப்பட்ட விதத்தால் நீதித்துறையின் மீதே மக்களுக்குசந்தேகம் ஏற்பட்டிருந்தது. இப்போது தனக்கு எதிராக தீர்ப்பு வந்துள்ளதற்கு தார்மீக பொறுப்பை ஜெயலலிதா ஏற்கவேண்டும்.

வழக்கு விசாரணையை கர்நாடக நீதிமன்றத்திற்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மகிழ்ச்சி தருகிறது.

லஞ்சப் புகாரையடுத்து மத்திய அமைச்சர் பதவியில் இருந்து திலிப் சிங் ஜூடியோவை பிரதமர் வாஜ்பாய்நீக்கியிருப்பதும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதும் சரியான நடவடிக்கை. இதன் மூலம் தனது அரசியல்நேர்மையை வாஜ்பாய் நிரூபித்துள்ளார். இதற்காக ஒட்டுமொத்தமாக பா.ஜ.கவை குறை சொல்வது சரியல்ல.

வாசனை காங்கிரஸ் தலைவராக்கியதால் காங்கிரஸ்- திமுக இடையே உறவு ஏற்படுவது பாதிக்கப்படுமா என்றுகேட்கிறீர்கள். அப்படிப்பட்ட உறவு குறித்து நாங்கள் பேசவே இல்லையே.

பொடாவை நீக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையில் தீவிரமாக உள்ளோம். டிசம்பர் 1ம் தேதி திட்டமிட்டபடிபோராட்டம் நடக்கும்.

587 அரசு ஊழியர்களை நிரந்தரமாக டிஸ்மிஸ் செய்யும் அரசின் முடிவு தவறானது. அதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்றார் கருணாநிதி.

சுப்பிரமணியம் சுவாமி சந்தோஷம்:

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னையிலிருந்து பெங்களூர்க்கு மாற்றி உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவை ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி வரவேற்றுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை தனி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணையின்போதுஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் நடந்து கொண்ட முறை சாட்சிகளை அச்சுறுத்தும் விதமாக இருந்தது.எனவே தான் அவர்கள் பல்டி அடித்தனர் என்று கூறியுள்ளார்.

சுப்பிரமணியம் சுவாமி தான் ஜெயலலிதா, சசிகலா மற்றும் தினகரன் மீதான சொத்து குவிப்பு வழக்கைத்தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வைகோ வரவேற்பு:

ஜெயலலிதா மீதான வழக்கை பெங்களூருக்கு மாற்றியதன் மூலம் நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கைஅதிகரிக்கப்பட்டுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

கர்நாடக அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று சட்டசபையில் ஜெயலலிதா பேசினார். இந்து ஆசிரியரைபெங்களூரில் வைத்து கைது செய்ய முயன்றார். இப்போது அதே கர்நாடகத்துக்கு, பெங்களூருக்குஜெயலலிதாவின் வழக்கு மாற்றப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X