For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திமுக போராட்டம்: எம்.பிக்கள் பங்கேற்க மாட்டார்கள்- கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பொடா சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி திமுக சார்பில் நடக்கவுள்ள மறியல்போராட்டத்தில் அக் கட்சியின் எம்.பிக்கள் பங்கேற்க மாட்டார்கள் என்று கருணாநிதி அறிவித்துள்ளார்.

பா.ஜ.கவுடனான மோதல் போக்கில் இருந்து திமுக விலகி வருவதன் அடுத்த படியாக இது கருதப்படுகிறது. இருகட்சிகளுக்கு இடையே உறவைத் தொடர்வது குறித்து பிரதமர் வாஜ்பாயும் கருணாநிதியும் நேரடியாக பேசிவருவதாகவும், இதில் வேறு தலைவர்கள் யாரும் தலையிட வேண்டாம் என வாஜ்பாய் கூறிவிட்டதாகவும்தெரிகிறது.

இதனால் அதிமுகவுக்கு பா.ஜ.க. தனது கதவுகளை அடைத்துவிட்டதாகக் கருதுகிறது திமுக.

இந் நிலையில் இன்று கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 15ம் தேதி நடக்கவுள்ள மறியல் அறப்போரிலிருந்து திமுக லோக்சபா, ராஜ்யசபா உறுப்பினர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் பொடா மறு ஆய்வு திருத்த சட்டம் தொடர்பான முக்கிய விவாதம் நாடாளுமன்றத்தில்நடைபெறவுள்ளது. எனவே அந்த விவாதங்களில் கலந்து கொண்டு திமுகவின் கருத்தை ஆணித்தரமாகஎடுத்துரைக்க வேண்டிய கடமை எம்.பிக்களுக்கு உண்டு.

எனவே 15ம் தேதி போராட்டத்தில் திமுக எம்.பிக்கள் கலந்து கொள்ள வேண்டாம். மாறாக நாடாளுமன்றவிவாதங்களில் தவறாமல் கலந்து கொண்டு திமுகவின் கருத்தை உரத்துத் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்கருணாநிதி.

மத்திய அரசில் உள்ள அமைச்சர் ராஜாவும், அரசை ஆதரிக்கும் எம்.பிக்களும் அதே அரசை எதிர்த்து போராட்டம்நடத்தினால் திமுகவின் இரட்டை நிலை குறித்து வெளிப்படையாக விமர்சனம் எழும் என்பதும் கருணாநிதியின்இந்த புதிய முடிவுக்குக் காரணமாகக் கருதப்படுகிறது.

மேலும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மத்திய அரசின் முடிவையும் கருணாநிதிஆதரித்துள்ளார்.

முன்னெச்சக்கை கைது: திமுக மனு மீது இன்று தீர்ப்பு

இதற்கிடையே 15ம் தேதி மேற்கொள்ளவுள்ள மறியல் போராட்டத்தையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதாஙகள் கைது செய்யப்படுவதற்கு தடை கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீது இன்று சென்னைஉயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.

இந்த மனுவை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி ஞானப் பிரகாசம் ஆகியோர் அடங்கியபெஞ்ச், இன்று காலை வரை திமுகவினரை கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.இதையடுத்து காலை இந்த மனு மீது மீண்டும் விசாரணை நடந்தது.

அப்போது திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால்,அரசியல் சட்டத்தின் 19வது பிரிவின் கீழ்போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமையாகும். அதை போலீஸாரால் தடுக்க முடியாது என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட அரசு தலைமை வக்கீல் என்.ஆர்.சந்திரன், இந்தப் போராட்டம் மத்திய அரசு அலுவலகங்கள்முன் நடைபெறுவதால், ஊழியர்கள் பணிக்குச் செல்வதில் பாதிப்பு ஏற்படும். எனவே இதை அனுமதிக்க முடியாது.முன்னெச்சரிக்கை கைது தவிர்க்க முடியாதது என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் இன்று மாலை இந்த மனு மீது தீர்ப்பு வழங்குவதாக அறிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X