For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழ் பேசும் தூதர்களை நியமிக்க கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:-

தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் இந்திய தூதராக தமிழர்களையே நியமிக்க வேண்டும் என்று உலகத் தமிழர்பேரமைப்பு மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாநாட்டில் நிறைவேட்டப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

1. கும்பகோணம் தீ விபத்தில் 93 குழந்தைகள் மாண்ட நிகழ்ச்சி அதிர்ச்சியையும், அளவில்லாத துயரத்தையும்அளித்துள்ளது. வளமான எதிர்காலம் காத்திருந்த நிலையில் கருகி மடிந்த இந்த இளம் மொட்டுகளுக்கு இம்மாநாடு தலைதாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.

2. தமிழ்த் தொண்டில் சிறந்தவரும், உலகத் தமிழர் பேரமைப்பு உருவாக்கப் பணிகளில் முன்னின்றவருமானதமிழறிஞர் மெய்யப்பனார் மறைவிற்கு மாநாடு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

3. தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் இலக்கியத் துறை தலைவராகப் பணியாற்றிவரான பேராசிரியர்நெடுஞ்செழியன், தமிழறிஞர் குணசீலன் மற்றும் பல தமிழர்கள் மீது கர்நாடக அரசு பொய் வழக்கு தொடர்ந்துசிறையில் அடைத்துள்ளது. அவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு கர்நாடக அரசை உலகத் தமிழர்பேரமைப்பு வற்புறுத்துகிறது.

4. இந்தியக் குடியரசு தலைவர் அப்துல் கலாம், தனது நாடாளுமன்ற உரையில் தமிழ் செம்மொழி ஆக்கப்படும்என்று அறிவித்ததை உலகத் தமிழர் பேரமைப்பு வரவேற்கிறது; நன்றி கூறுகிறது.

இதற்கான அரசு ஆணையை உடனே வெளியிடுமாறு மத்திய அரசை உலகத் தமிழர் பேரமைப்பு வேண்டிக்கொள்கிறது.

5. உலக நாடுகளுக்கு வேலை தேடிச் செல்லும் தமிழர்கள் இழிவுகளுக்கும், கொடுமைகளுக்கும் ஆளாகித் தவிக்கும்நிலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. அவர்களைப் பாதுகாக்க வேண்டிய இந்திய தூதரகங்களில்மொழிப்பிரச்சினை காரணமாக அலட்சியம் காட்டப்படுகிறது.

எனவே தமிழர்கள் பெருமளவில் வாழும் இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா, மொரிசீயஸ், தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் தமிழர்களையே தூதுவர்களாக நியமிக்க வேண்டும் என உலகத் தமிழர்பேரமைப்பு வலியுறுத்துகிறது.

6. இந்தியாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்து கொள்ள இலங்கை அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.இலங்கைக்கு அருகில் பகை நாடுகள் எதுவும் இல்லாத நிலையில் பாதுகாப்பு உடன்பாடு என்ற பெயரில்இந்தியாவின் உதவியோடு ஈழத்தமிழர்களை ஒடுக்கவே இலங்கை அரசு திட்டமிட்டு உள்ளது.

இதை மத்திய அரசு உணர்ந்து உடன்பாட்டினைத் தவிர்க்க வேண்டும் என உலகத் தமிழர் பேரமைப்பு வேண்டிக்கொள்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X