For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி, தஞ்சையில் வ-ழக்க-றி-ஞர்கள் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

திருச்சி:

மதுரை உயர்நீதிமன்றத்துடன் தங்களது மாவட்டங்களை இணைக்கக் கோரி திருச்சி, தஞ்சையில் வழக்கறிஞர்கள்சாலை மறியல், உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினர்.

மதுரை உயர்நீதிமன்றக் கிளையுடன் இணைக்கப்பட்டிருந்த திருச்சி, தஞ்சாவூர், கரூர் மாவட்டங்களை சென்னைஉயர்நீதிமன்றத்துடன் இணைக்க 9 நீதிபதிகள் குழு -முடிவு செய்து, மத்திய அரசுக்குப் ப-ரிந்துரைத்துள்ளது.

இதனால் திருச்சி, தஞ்சை, கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றவழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரனின் -நருக்கடிக்கு நீதிபதிகள் பணிந்து விட்டதாக அவர்கள்கு-முறுகிறார்கள்.

9 நீதிபதிகள் குழுவின் -முடிவைக் கண்டித்தும், அதை திரும்பப் பெறக் கோ-ரியும் காலவரையற்ற வேலை-நிறுத்தப்போராட்டத்தில் அவர்கள் குதித்துள்ளனர்.

இன்று திருச்சி மாவட்ட வழக்கறிஞர்கள் செஷன்ஸ் நீதிமன்றம் -முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில்குதித்துள்ளனர். மதுரையுடன் திருச்சியை சேர்க்கும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள்தெ-ரிவித்துள்ளனர்.

இதேபோல, தஞ்சையில் மாவட்ட அமர்வு நீதிமன்றம் -முன்பு சாலை மறியலில் வழக்கறிஞர்கள் ஈடுபட்டனர்.அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். -மூத்த வழக்கறிஞர் ஜீவா குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில்,பிரபாகரனின் மிரட்டலுக்கு உயர்நீதிமன்ற நிர்வாகம் பணிந்து விட்டது.

தஞ்சை, திருச்சி, கரூர் மாவட்டங்களை பகடைக் காயாக பயன்படுத்தி, எங்களைக் கேவலப்படுத்தி,அவமானப்படுத்தி சென்னை உயர்நீதிமன்றத்துடன் சேர்த்துள்ளனர்.

3 மாவட்டங்களையும் மீண்டும் மதுரையுடன் சேர்க்கும் வரை எங்களது போராட்டம் ஓயாது, இதை -நாங்கள்விடுவதாக இல்லை என்றார் அவர் ஆவேசத்துடன்.

இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்றும் அத்துமீறி -நடந்து கொண்டதால் நீதிமன்றவளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. -நற்று விசாரணை -நடந்து கொண்டிருந்த நீதிமன்ற கதவை ஓங்கித் தட்டிஅவர்கள் ரகளை செய்தனர்.

இதனால் நீதிபதி தினகரன் கடும் கோபமடைந்து காவல்துறை ஆணையரை வரவழைக்க உத்தரவிட்டார். பின்னர்வழக்கறிஞர் சங்கத் தலைவர் பிரபாகரன் வந்து மன்னிப்பு கேட்டதால் தனது உத்தரவை கைவிட்டார் நீதிபதிதினகரன்.

இந் -நிலையில் இன்று காலையும் பணிக்குச் சென்ற வழக்கறிஞர்களை பிரபாகரன் தலைமையிலான சங்கத்தைச்சேர்ந்த வழக்கறிஞர்கள் தடுத்து நிறுத்தினர். சிலரை கையைப் பிடித்து இழுத்து ஆவேசமாகப் பேசினர்.

இதனால் கோபமடைந்த அந்த வழக்கறிஞர்கள் உயர்நீதிமன்றப் பதிவாள-ரிடம் புகார் கொடுத்தனர். அந்தப்புகாரை வழக்காக மாற்றி அதை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார் நீதிபதி தினகரன். இதையடுத்து அங்கு வந்தபிரபாரகன், வழக்கறிஞர்கள் செயலுக்கு மன்னிப்பு கோருவதாகவும், திங்கள்கிழமை -முதல் வழக்கறிஞர்கள்தங்களது போராட்டத்தைக் கைவிட்டு பணிக்குத் திரும்புவதாகவும் தெ-ரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X