For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுக சேலம் மாநாடு நாளை தொடக்கம்

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

திமுகவின் இரண்டு நாள் சிறப்பு மாநாடு நாளை சேலத்தில் தொடங்குகிறது.

கடும் கோஷ்டிப் பூசலுக்கு இடையே இந்த மாநாடு நடப்பது குறிப்பிடத்தக்கது. விழுப்புரத்தில்முன்னாள் அமைச்சரும் ஸ்டாலின் ஆதரவாளருமான பொன்முடி மண்டல மாநாட்டை மிகபிரமாண்டமாக நடத்த, இது போன்ற ஒரு மாநாட்டை இனி யாரும் நடத்திட முடியாது என்றுபேசினார் கட்சித் தலைவர் கருணாநிதி.

அப்போது பேசிய சேலம் மாவட்டச் செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம், என்னைப் போன்றமூத்தவர்களை மேடையில் வைத்துக் கொண்டு, இது போன்ற மாநாட்டை யாரும் நடத்த முடியாதுஎன கலைஞர் பேசியது தவறு என்றார்.

கோஷ்டிப் பூசல்:

அது முதல் வீரபாண்டியாருக்கும் ஸ்டாலின்-பொன்முடி கோஷ்டிக்கும் இடையே மனக் கசப்பு இருந்துவருகிறது. இந் நிலையில் கட்சியின் அடுத்த மண்டல மாநாட்டை எந்த மாவட்டம் நடத்துவது என்றுபேச்சு வந்தபோது, அதை சேலத்தில் நடத்த முன் வந்தார் வீரபாண்டி ஆறுமுகம்.

விழுப்புரம் மாநாட்டை விடவும் மிகப் பிரமாண்டமாக அதை நடத்திக் காட்டுவதாக அறிவித்தார்.இதற்காக நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பல லட்சம் செலவில் அதைசமப்படுத்தும் பணி தொடங்கப்பட்டது.

சிறப்பு மாநாடு ஆன மண்டல மாநாடு:

முதலில் இது மண்டல மாநாடாக நடத்தப்பட இருந்தது. ஆனால், மண்டல மாநாடு எனில் கட்சியின்தலைவர் கலந்து கொள்ள வேண்டியதில்லை.

இதனால் இதில் கருணாநிதியை கலந்து கொள்ள விடாமல் செய்ய ஸ்டாலின் கோஷ்டி முயல்வதாகவீரபாண்டி ஆறுமுகத்துக்குத் தகவல் கிடைக்க, அதை சிறப்பு மாநாடாக மாற்றிவிட்டார்.

கட்சி விதிகளின்படி சிறப்பு மாநாடு எனில் கட்சியின் தலைவர் பங்கேற்க வேண்டும். இந்தகோஷ்டிப் பூசல்களை திமுக மறைத்தாலும் அவ்வப்போது அது வெளிப்பட்ட வண்ணம் உள்ளது.

மக்களவைத் தேர்தலில் கிடைத்த மாபெரும் வெற்றிக்குப் பின் நடத்தப்படும் முதல் மாநாடுஎன்பதால், இதில் மாநிலத்தின் அனைத்துப் பகுதி தொண்டர்களும் கலந்து கொள்ள வசதியாகவேஇதை சிறப்பு மாநாடாக மாற்றியதாக திமுக தலைமை கூறுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

நாளை தொடங்கவுள்ள இந்த மாநாட்டுக்காக பல ஆயிரம் சதுர அடி பரப்பில் கொட்டகைஅமைக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் தீ விபத்துக்குப் பின் ஓலைக் கொட்டகைகளுக்குகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், இந்த மாநாட்டுக்கு எதிராக அதிமுக சார்பில் நீதிமன்றத்தில்தடை வாங்கப்படலாம் என்ற அச்சமும் திமுகவினர் மத்தியில் உள்ளது.

இதையடுத்து ஏகப்பட்ட தண்ணீர் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாக விசாலமானவழிகள், தீ அணைக்கத் தேவையான கருவிகளும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

மாநாடுக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தலின் முகப்புத் தோற்றம் குவாலியர் அரண்மனை போன்றுவடிவமைக்கப்பட்டுள்ளது. 3 லட்சம் பேர் வரை நிகழ்ச்சியை காணும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

ரயிலில் கருணாநிதி சேலம் பயணம்:

மாநாட்டில் பங்கேற்க திமுக தலைவர் கருணாநிதி இன்று பிற்பகலில் ரயில் மூலம் சேலம் கிளம்பிச் சென்றார். மாநாட்டுத்திடலிலேயே அவருக்கும், பிற மூத்த தலைவர்களுக்கும் சிறப்பு ஓய்வறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சாரட் ஓட்டும் ஆறுமுகம்:

மாநாட்டின் முதல் நாள் நிகழ்ச்சியில், கருணாநிதியை சாரட் வண்டியில் உட்கார வைத்து முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்வண்டி ஓட்டியாக இருந்து மாநாட்டு திடலுக்கு அழைத்து வருகிறார்.

நாகூர் ஹனீபா இசை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்குகிறது. பின்னர் 9 மணிக்கு திமுக துணை பொதுச் செயலாளர் ஸ்டாலின் திமுக கொடிஏற்றி வைக்கிறார். கருணாநிதி மாநாட்டுக்கு தலைமை தாங்குகிறார். வீரபாண்டி ஆறுமுகம் வரவேற்பு ஆற்றுகிறார்.

திராவிட இயக்க முன்னோடிகள் படத்தை கட்சியின் முன்னணி தலைவர்கள் திறந்து வைக்கிறார்கள். பின்னர் ஸ்டாலின் கொடியேற்றுவிழா உரை நிகழ்த்துகிறார்.

மாலை 3 மணிக்கு இசை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் 4 மணி முதல் மத்திய அமைச்சர்கள். டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், ராஜா,பழனி மாணிக்கம், சுப்புலட்சுமிஜெகதீசன், வேங்கடபதி, ரகுபதி, முன்னணி தலைவர்கள் ரகுமான்கான், பொன்முடி, விடுதலை விரும்பி,திருச்சி என்.செல்வேந்திரன், நடிகர்கள் சரத்குமார், நெப்போலியன், சந்திரசேகர், தியாகு, குமரிமுத்து ஆகியோர் பேசுகிறார்கள்.

இரவு 9 மணிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் பேசுகிறார். அதைத் தொடர்ந்து சங்கத்தமிழ் இசை நாட்டிய நாடகத்துடன்முதல்நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.

2வது நாள் நிகழ்ச்சியில் கட்சிப் பிரமுகர்கள் பலர் பேசுகின்றனர். மாலை 4 மணிக்கு மாநாட்டு தீர்மானங்கள்நிறைவேற்றப்படுகின்றன். இரவு 8.30 மணிக்கு கருணாநிதி நிறைவு உரை ஆற்றுகிறார். அத்துடன் மாநாடு முடிவடைகிறது.

திராவிட இயக்கமும் தமிழகமும்:

மக்களவைத் தேர்தலில் கிடைத்த வெற்றிக்கு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் மாநாடாக இதுஇருக்கும் என திமுகவினர் கூறுகின்றனர்.

தமிழக சட்டப் பேரவைக்கும் முன் கூட்டியே தேர்தல் வரக்கூடும் என்ற பேச்சு அடிபடும் சூழல் இம்மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. காவிரி, அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் உரிமைகள்,மாநிலத்தின் உரிமைகளைப் பெறுதல், திராவிட இயக்கத்தை வலுப்படுத்துதல் ஆகியவை குறித்துஇதில் விவாதிக்கப்படவுள்ளது.

1994ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன் சேலத்தில் பிரம்மாண்டமான மாநாட்டை திமுகநடத்தியது. அதைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் பெரும் வெற்றியும் பெற்றதை செண்டிமென்டலாகசுட்டிக் காட்டுகின்றனர் திமுகவினர்.

திராவிட இயக்கத்தால் தமிழகத்தில் ஏற்பட்ட சமூக, பொருளாதார, தொழில்துறை மாற்றங்கள்குறித்து மத்திய திமுக அமைச்சர்கள் மாநாட்டில் விளக்கிப் பேசுவார்கள் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X