For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுக ஆட்சியைக் கலைக்க திமுக கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

Karunanidhi led in chariot by Veerapandi Arumuganதிமுகவின் இரண்டு நாள் சிறப்பு மாநாடு சேலத்தில் குமரகிரி மலையடிவாரத்தில் இன்று காலைமிகப் பிரம் மாண்டமாகத் தொடங்கியது. முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியை356வது பிரிவைப் பயன்படுத்தி கலைக்க வேண்டும் என்றும் மாநாட்டில் கோரிக்கைவிடுக்கப்பட்டது.

மக்களவைத் தேர்தலில் மாபெரும் தோல்வியடைந்த ஜெயலலிதா பேசுகையில், மத்தியில் மக்கள்ஆட்சி மாற்றத்தை விரும்பியதாகவும் அதனால் தான் அதிமுக தோற்றதாகவும், இந்தத் தோல்விக்கும்மாநில அரசின் செயல்பாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் சொன்னார்.

ஆனால், அவருக்கு வசதியாக ஒரு விஷயத்தை அவர் மறந்துவிட்டார். மக்களவைத் தேர்தலோடுமங்களூர் இடைத் தேர்தலுக்கு நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் 13,000 வாக்குகள் வித்தியாசத்தில்வென்றார். இது யாருக்குக் கிடைத்த தோல்வி? மத்திய அரசுக்கா? ஜெயலலிதாவே இது உங்களுக்குக்கிடைத்த தோல்வி. அதிமுக அரசை மக்கள் நிராகரித்துவிட்டதால் கிடைத்த தோல்வி அது என்றார்ஸ்டாலின்.

தொடர்ந்து மத்திய அமைச்சர்கள். டி.ஆர். பாலு, தயாநிதி மாறன், ராஜா, பழனி மாணிக்கம், சுப்புலட்சுமிஜெகதீசன்,வேங்கடபதி, ரகுபதி, முன்னணி தலைவர்களான ரகுமான்கான், பொன்முடி, விடுதலை விரும்பி, திருச்சிஎன்.செல்வேந்திரன், நடிகர்கள் சரத்குமார், நெப்போலியன், சந்திரசேகர், தியாகு, குமரிமுத்து ஆகியோர்பேசுகிறார்கள்.

இரவு 9 மணிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் பேசுகிறார். அதைத் தொடர்ந்து சங்கத்தமிழ் இசைநாட்டிய நாடகத்துடன் முதல்நாள் நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகின்றன.

நாளை கட்சிப் பிரமுகர்கள் பலரும் பேசுகின்றனர். மாலை 4 மணிக்கு மாநாட்டு தீர்மானங்கள்நிறைவேற்றப்படுகின்றன். இரவு 8.30 மணிக்கு கருணாநிதி நிறைவுரை ஆற்றுகிறார்.

திமுக மாநாட்டையொட்டி சேலம் நகர் முழுவதும் கட்சிக் கொடிகள், தோரணங்கள், மின் விளக்குகளால் ஆனநூற்றுக்கணக்கான அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

மாநாட்டுத் திடலில் திராவிட இயக்க வரலாற்றுப் புத்தகங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. தொண்டர்களுக்குகுறைந்த கட்டணத்தில் உணவும் வழங்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X