ஜெ. வழக்கு: 20 மொழி பெயர்ப்பாளர்கள் தேவை !
பெங்களூர்:
முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குத் தொடர்பான தமிழ் ஆவணங்களை ஆங்கிலத்திற்குமொழி பெயர்க்க 20 மொழி பெயர்ப்பாளர்கள் தேவை என்று பெங்களூர் நகர அமர்வு நீதிமன்றம் கோரிக்கைவிடுத்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா மீதான ரூ. 66 கோடி சொத்து வழக்கை விசாரிக்க பெங்களூர் சிட்டி சிவில் நீதிமன்றவளாகத்தில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீதிபதியாக பச்சாபுரே நியமிக்கப்பட்டுள்ளார். சென்னைதனி நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்குத் தொடர்பான ஆவணங்கள் சில வாரங்களுக்கு முன் பெங்களூர் தனிநீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
இந்த ஆவணங்களை மொழி பெயர்க்கும் பணியில் 20 கல்லூரி பேராசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாககர்நாடக அரசு கூறி வருகிறது.
ஆனால், பேராசிரியர்கள் கல்லூரிப் பணிகளுடன் இதை கவனிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.மொழி பெயர்ப்புப் பணி மிகவும் மெதுவாக நடப்பதால், ஆவணங்களை ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்க உடனே20 மொழி பெயர்ப்பாளர்கள் தேவை என்று பெங்களூர் நகர அமர்வு நீதிமன்ற பதிவாளர் பி.வி.பாட்டீல்கோரிக்கை விடுத்துள்ளார்.
இத்தனை பேரும் கிடைத்த பின்னர் மொழி பெயர்ப்புப் பணி விரைந்து மேற்கொள்ளப்படும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.
இதனால் நீதிமன்ற விசாரணை மேலும் பல வாரங்களாகலாம் என்று கூறப்படுகிறது.
-
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications