• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஸ்டிரைக் செய்தால் டெஸ்மா பாயும்: அரசு!

By Staff
|

சென்னை:

போக்குவரத்து, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்த அறிவிப்பைவெளியிட்டுள்ள நிலையில், ஸ்டிரைக் செய்வோர் மீது டெஸ்மா சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனதமிழக அரசு எச்சரித்துள்ளது.

20 சதவீத போனஸ் கோரி தமிழக மின்சார வாரியம், போக்குவரத்துக் கழகங்கள், ஆவின் நிறுவனம்,உணவுத்துறை, நுகர்பொருள் வாணிபக் கழகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறை ஊழியர் சங்கங்கள்வேலைநிறுத்த நோட்டீஸை அரசிடம் கொடுத்துள்ளன.

இந் நிலையில் அவர்களுக்கு 10 சதவீத போனசும், ஊதிய உயர்வு தரப்படும் வரை இடைக்கால நிவாரணமாகமாதந்தோறும் ரூ. 250ம் தரப்படும் என அரசு இன்று அறிவித்தது.

அதே நேரத்தில் வேலை நிறுத்தம் செய்தால், டெஸ்மா சட்டத்தின் 3 வருட சிறை, ரூ. 5,000 அபராதம்விதிக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. இது தொடர்பாக தொழிற்சங்கங்களுக்கு அரசு நேற்று நோட்டீஸ்அனுப்பியுள்ளது.

இதுகுறித்து சிஐடியூ மாநிலப் பொதுச் செயலாளர் செளந்தரபாண்டியன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கோவைமற்றும் ஈரோடு மாவட்ட போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத் தலைவர்களுக்கு போக்குவரத்துக் கழக உயர்அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

அதில், தமிழகத்தில் அத்தியாவசியப் பணிகள் பாதுகாப்பு சட்டம் (டெஸ்மா) அமலில் உள்ளது. எனவே வேலைநிறுத்தம் செய்வது டெஸ்மா சட்டப்படி குற்றமாகும்.

செவ்வாய்க்கிழமை முதல் ஊழியர்கள் யாரும் விடுப்பில் கூட போகக் கூடாது. மீறி விடுப்பு எடுத்தாலோ அல்லதுவேலை நிறுத்தம் செய்யத் தூண்டினாலோ, டெஸ்மா சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலை நிறுத்தம் செய்வோர் அல்லது வேலைக்கு வராமல் இருப்போர் மீது டெஸ்மா சட்டப்படி நடவடிக்கைஎடுக்கப்பட்டு அவர்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகஅதிகாரிகள் மிரட்டியுள்ளனர்.

அரசுக்கு வேலை நிறுத்த நோட்டீஸ் கொடுத்ததே, குறிப்பிட்ட தேதிக்குள் ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப்பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் பேச்சு நடத்துவதை விட்டு டெஸ்மாவைக் காட்டிமிரட்டியுள்ளது தமிழக அரசு என்றார் செளந்தரபாண்டியன்.

அரசு எச்சரிக்கை விடுத்தாலும் போராட்டம் நடத்துவதில் மாற்றம் இல்லை என்று திமுகவைச் சார்ந்த தொழிலாளர்முன்னேற்ற சங்கம் உறுதியாகக் கூறியுள்ளது.

கடந்தமுறையும் இதுபோல அரசின் எச்சரிக்கையையும் மீறி போராட்டம் நடத்திய ஊழியர்களைத் தான்லட்சக்கணக்கில் சஸ்பெண்ட், டிஸ்மிஸ் செய்தது தமிழக அரசு. மக்களவைத் தேர்தலில் படுதோல்விகிடைத்ததையடுத்து அந்த நடவடிக்கைகளை ரத்து செய்தது.

வாசன் அறிக்கை:

இந் நிலையில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசு ஊழியர்களின் சலுகைகளைப் பறித்ததால் தான் அவர்கள் போராட்டம் நடத்தினர். ஆனாஸ், அவர்களைஒட்டுமொத்தமாக டிஸ்மிஸ் செய்த முதல்வர் ஜெயலலிதா தனது சர்வாதிகாரப் போக்கை வரலாற்றில் பதிவுசெய்தார். தேர்தல் தோல்விக்குப் பின்னர் மீண்டும் வேலைக்குச் சேர்த்து பரிகாரம் தேடினார்.

தற்போது மீண்டும் 3 வருடம் சிறை தண்டனை என மிரட்டல் விடுக்க ஆரம்பித்துள்ளார். 4 வருடமாகஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் தான் அதை தொழிலாளர்கள்வலியுறுத்துகின்றனர். அவர்கள் மீது அடக்குமுறையை மீண்டும் ஏவ நினைக்கிறார் ஜெயலலிதா.

இதை அனைவரும் சேர்ந்து முறியடிக்க வேண்டும். ஜெயலலிதாவுக்கு ஜனநாயக உணர்வோ, பற்றோ சிறிதும்கிடையாது. தெரிந்ததெல்லாம் அரசியல் பழிவாங்கலும் தான். இதற்கு அவரது பிபிசி பேட்டியே சான்றாகும்.மக்களவைத் தேர்தல் தோல்வியால் ஜெயலலிதா படிப்பினை பெறுவார் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால்,அப்படி ஏதும் நடந்ததாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார் வாசன்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X