For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விஜய் மல்லய்யா ரூ. 3 கோடி நிவாரண உதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

A scene in Tarangambadi
சுனாமியால் தாக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு தொழிலதிபர் விஜய் மல்லய்யா ரூ. 3 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

தனது யுனைட்டர் பிரவரீஸ், கிங் பிஷ்ஷர் நிறுவனம் சார்பில் இந்த நிதியுதவியை வழங்கியுள்ளார். மேலும் பெங்களூரில் உள்ள தனதுமல்லய்யா மருத்துவமனையின் சார்பில் 50ககும் மேற்பட்ட மருத்துவக் குழுவினரை சுனாமி பாதித்த தமிழகப் பகுதிகளுக்கும் அனுப்பிவைத்துள்ளார்.

இதற்கிடையே தான் கதை, வசனம் எழுதி வரும் கண்ணம்மா மற்றும் மண்ணின் மைந்தன் படத்தின் மூலம் கிடைக்கும் ஊதியத்தை தமிழத்திரையுலகினர் மூலமாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்குவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

திமுக அறக்கட்டளை சார்பில் ரூ. 1 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு கருணாநிதி வழங்கினார். மேலும் சன் டிவியும், சுனாமி நிதியைசேகரிக்கத் தொடங்கியுள்ளது. திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை பிரதமர் பொது நிவாரண நிதியில் சேர்க்கப்போவதாகக் கருணாநிதி அறிவித்தார்.

தமிழக கடலோரப் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசிடம் நிதியைச் சேர்க்காமல் பிரதமரிடம் கருணாநிதி நிதிவழங்குவது நியாயமா என்ற கேள்வி எழுந்தது.

இதையடுத்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திரையுலக நண்பர்கள் சுனாமி பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவுவதற்காக தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி வருகிறார்கள். நானும்50 ஆண்டு காலம் திரையுலகில் இருந்து வருபவன் என்ற வகையில், நான் கதை, வசனம் எழுதியுள்ள கண்ணம்மா, மண்ணின் மைந்தன்ஆகிய படங்களுக்காக எனக்கு வழங்கப்படும் ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் சேர்க்கத் தயாராக உள்ளேன் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.

இதற்கிடையே, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கருணாநதி இன்று வீடு திரும்புகிறார்.

டிவி நடிகர்களும் உதவி:

தமிழ்த் திரையுலகினர் சுனாமி நிவாரண உதவியைத் திரட்டுவது போல டிவி நடிகர்களும் நிவாரண உதவிகளை சேகரிக்க முடிவுசெய்துள்ளனர்.

டிவி நடிக, நடிகையரின் சின்னத்திரை நடிகர் சங்கத்தின் கூட்டம் சென்னையில் நடந்தது. இக் கூட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்டமக்களுக்கு உதவுவதற்காக சின்னத்திரை நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள், இயக்குனர்கள் அனைவரும் தங்களது ஒரு நாள் ஊதியத்தைநிவாரண உதவியாக வழங்க முடிவு செய்யப்பட்டது.

வரும் 2ம் தேதி சென்னையில் ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் உடைகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை திரட்டுவது என்றும்முடிவு செய்யப்பட்டுள்ளது.

இக் கூட்டத்தில் நடிகர்கள் அபிஷேக், பிரேம் சாய், நடிகைகள் வினோதினி, நளினி, சிந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விஜயகாந்த் ஆறுதல்:

சுனாமி தாக்குதலுக்கு ஆளான கடலூர் பகுதி மக்களுக்கு நடிகர் விஜயகாந்த் நேரில் சென்று உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார்.

அரசு மருத்துவமனையில் சுனாமி தாக்குதலால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைப் பார்த்து ஆறுதல் கூறினார். அவர்களில் 500 பேருக்குவேட்டி, சேலைகளை வழங்கினார்.

அதன் பின்னர் நாகை சென்ற அவர் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சுனாமி தாக்குதலால்பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகளைச் செய்யுமாறு எனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

ஏராளமான வீட்டு உபயோகப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுதவிர முதல்வர் நவாரண நிதிக்கும் ரூ. 10 லட்சம் நன்கொடைஅளிக்கவுள்ளேன். சென்னை திரும்பியதும் முதல்வரை நேரில் சந்தித்து இதற்கான காசோலையை அளிப்பேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X