For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிவாரண பணி: தமிழக அரசுக்கு ரஜினி பாராட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Vijay and Rajini give the cheque to CM

சுனாமி நிவாரண நிதிக்காக முதல்வர் ஜெயலலிதாவிடம் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், நடிகை த்ரிஷா உள்ளிட்டோர் இன்றுநிதியுதவியை அளித்தனர்.

இன்று கோட்டையில் ஜெயலலிதாவைச் சந்தித்த ரஜினி ரூ. 21 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

பின்னர் வெளியே செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக அரசு சுனாமி பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளைசிறப்பாக செய்து வருகிறது. சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கலைநிகழ்ச்சி மூலம் நிதி திரட்டப்படும் என்று நடிகர்விஜயகாந்த் கூறியிருப்பது குறித்து எனக்குத் தெரியாது. அவ்வாறு கலைநிகழ்ச்சி நடந்தால், அதில் கலந்து கொள்வது குறித்துபேசிவிட்டு சொல்கிறேன் என்றார்.

இதேபோல முன்னாள் ஆளுநர் ராம்மோகன் ராவ் (ரூ.21,000), தொழிலதிபர் ஏ.சி.முத்தையா (ரூ.1.11 கோடி), நடிகர் விஜய்(ரூ.10 லட்சம்), நடிகை த்ரிஷா (ரூ.1 லட்சம்), தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளன தலைவர் பெப்சி விஜயன்(ரூ.10 லட்சம்), தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்ரி (ரூ.1லட்சம்), அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமி (ரூ.35 லட்சம்),

லட்சுமி விலாஸ் வங்கித் தலைவர் கிருஷ்ணமூர்த்தி (ரூ.25 லட்சம்), நடிகை ராஜசுலோசனா (ரூ.2 லட்சம்), தினத்தந்தி அதிபர்பா.சிவந்தி ஆதித்தன் (ரூ.10 லட்சம்), மாலைமுரசு அதிபர் பா.ராமச்சந்திர ஆதித்தன் (ரூ.50 லட்சம்), புதிய நீதிக் கட்சித் தலைவர்ஏ.சி.சண்முகம் (ரூ.5 லட்சம்), சமூக நீதிக் கட்சித் தலைவர் ஜெகவீரபாண்டியன் (ரூ.10 லட்சம்),

நடிகை சி.ஆர். சரஸ்வதி (ரூ.2 லட்சம்), இயக்குநர் ராமாராவ் (ரூ.1லட்சம்) உள்ளிட்டோர் நிதியுதவி அளித்தனர்.

இன்று ஜெயலலிதாவிடம் முதலமைச்சர் பொது நிவாரண நதிக்கு ரூ. 6.27 கோடி அளிக்கப்பட்டது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.17 கோடி நிதி:

இதற்கிடையே பிரதமரின் தேசிய பேரழிவு நிதிக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ரூ.17 கோடி நிதி அளிப்பதாகஅறிவித்துள்ளது. அந்த நிறுவனம் ரூ.15 கோடியும், அதன் ஊழியர்கள் ரூ.2 கோடியும் அளிக்கின்றனர்.

சென்னையில் சுனாமி அலைகள் தாக்கியதும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் டீலர்கள் உடனடியாக நிவாரணப் பணிகளைமேற்கொண்டனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுப் பொட்டலங்களை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X