For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மதுவுக்கு போன நிவாரண நிதி: குமரியில் டாஸ்மாக் கடைகள் மூடல்

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி:

The scene in coastal area

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட நிவாரண உதவியை குடிப்பதற்கு பயன்படுத்தியது தெரிய வந்ததால்,கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 152 டாஸ்மாக் கடைகளில் 42 கடைகளை உடனடியாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது.

சுனாமி தாக்குதலால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கன்னியாகுமரியும் ஒன்று. இங்குள்ள குளச்சல், முட்டம் உள்ளிட்டபல கிராமங்கள் சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் இந்த மாவட்டத்தில் வித்தியாசமான பிரச்சினை ஒன்று மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது.சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ. 5,000 அளவுக்கு பொருட்கள் வழங்கியுள்ளது. அத்துடன் உணவுப்பொருட்கள் வாங்குவதற்காக பணம் கொடுத்துள்ளது.

இந்தப் பணத்தை சிலர் மது அருந்தப் பயன்படுத்துவதாக அரசுக்குத் தகவல் வந்தது. குடும்பத்தை இழந்து, உறவுகளை இழந்த கவலையில்உள்ள சிலர் குடித்துக் கவலையை போக்க இந்தப் பணத்தை பயன்படுத்தியதாகக் கூறினர்.

இதைத் தொடர்ந்து நாகர்கோயில், குளச்சல் பகுதிகளில் உள்ள 42 கடைகளை உடனடியாக மூட அரசு உத்தரவிட்டுள்ளது. குளச்சல்பகுதியில் உள்ளஒரு கடையில் 2 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் ரூ. 1.3 லட்சம் அளவுக்கு மது விற்பனை ஆகியுள்ளது.

தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கிறிஸ்தவப்பாதிரியார்களும் இந்த உத்தரவை வரவேற்றுள்ளனர்.

மீனவர்கள் சாலை மறியல்:

இந் நிலையில் குமரி மாவட்டத்தில் அஞ்சுகிராமம் அருகே உள்ள கூட்டப்புளி கிராம மீனவர்கள், நிவாரணப் பணிகள்கிடைக்கவில்லை என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சுனாமி அலையால் கூட்டப்புளி கிராமம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இங்குள்ள மக்கள் யாக்கோபுரம் மற்றும் வடக்கன்குளம்முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். கூட்டப்புளி கிராமத்தில் எந்த நிவாரணப் பணிகளும் இதுவரை நடைபெறவில்லை என்றுகூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மக்கள் கன்னியாகுமரி-திருச்செந்தூர் செல்லும் ரோட்டில் கூட்டப்புளி விலக்கில் இன்று காலைமறியலில் ஈடுபட்டனர். இந்த மறியலுக்கு அப்பாவு எம்.எல்.ஏ, பங்குத் தந்தை பொடாமின் அருள் வளன் அடிகள் ஆகியோர்தலைமை தாங்கினர்.

தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள மீனவர்களுக்கு வழங்கப்படுவதைப் போல தங்களுக்கும் 60 கிலோ அரிசி, ரூ. 4,000ரொக்கம், 3 லிட்டர் மண்ணெண்ணை, வேட்டி, சேலை, போர்வை உள்ளிட்டவை வழங்க வேண்டும்.

மீனவர்கள் வீடு கட்டிக் கொள்ள ரூ. 40,000 வழங்க வேண்டும். மீனவர்களின் வங்கிக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பதுஉள்ளிட்ட கோரிக்கைகளை மீனவர்கள் வலியுறுத்தி கோஷமிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் அந்த சாலையில் வந்த 5 அரசுப் பேருந்துகள், 20 லாரிகளையும் சிறை பிடித்தனர். இதனால்அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வள்ளியூர் டி.எஸ்.பி. சிங்காரவேலு, ராதாபுரம் தாசில்தார் சுப்பையன் உள்ளிடடோர்விரைந்து வந்து மீனவர்களை சமாதானப்படுத்தினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X