For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெயேந்திரரின் வாக்குமூல வீடியோவை ஒளிபரப்பிய சன் டிவி!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

Jeyandrarபோலீஸ் காவலில் ஜெயேந்திரர் இருந்தபோது அவர் அளித்த வாக்குமூலத்தின் சில பகுதிகள், குறிப்பாகவிஜயேந்திரர் தொடர்பாக ஜெயேந்திரர் கூறியவை அடங்கிய வீடியோ காட்சிகள் சன் டிவி உள்ளிட்ட சிலதொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று இரவு சன் டிவியின் செய்திகளில் ஜெயேந்திரர் போலீஸாருக்குக் கொடுத்த வாக்குமூலக் காட்சிகள்ஒளிபரப்பப்பட்டன. இந்தக் காட்சிகளில் ஜெயேந்திரர் படுத்தபடி உள்ளார். அவருக்கு அருகே சிலர் (போலீசார்)உட்கார்ந்துள்ளனர். அவர்களது முகம் காட்டப்படவில்லை.

ஊட்டி வளர்த்தேன்...

அந்தக் காட்சிகளில் ஜெயேந்திரர் பேசிய பேச்சுக்களில் சில பகுதிகள்:

என்னைக் (விஜயேந்திரர்?) கைது செய்வாங்களா, தம்பியைக் (ரகு?) கைது செய்வாங்களா என்றுதான் திருப்பித்திருப்பி என்னிடம் அவன் (விஜயேந்திரர்) கேட்டான்.

ஊட்டி வளர்த்தேன். அவனால எனக்கு ஏற்பட்டது பழிபாவம்தான். குரு மீது அவனுக்கு (விஜயேந்திரர்)மரியாதையே இல்லை. குருவை மதிக்க அவன் தவறிவிட்டான்.

அவன்.. இவன்..

இவனே (சங்கரராமன்?), அவனை (விஜயேந்திரர்) வெளியேத்திட்டீங்கன்னா நான் அப்படியே விட்டுடறேன்.ஒன்னுமே தொந்தரவு செய்ய மாட்டேன்னு சொல்லியிருக்கான்.

போலீஸ் குரல்: சாமிங்களே, பெண் சகவாசம், பாலியல் தொடர்புகள் என நடந்திருப்பது, அதுவும் மடத்துக்குள்நடந்திருப்பது ரொம்ப மோசமாக இருக்கே?

சிவ.. சிவா..

ஜெயேந்திரர் சிவ, சிவா என்று தலையில் அடித்துக் கொள்கிறார்.

போலீஸ் குரல்: மடத்துக்கு வெளியே நடந்திருந்ததுன்னா ஒரு பிரச்சினையும் இல்லை.

ஜெயேந்திரர்: (சற்று நேர அமைதிக்குப் பின்னர்) நான் யாரையும் குத்துண்ணோ, வெட்டுண்ணோ சொன்னதில்லை.எனது சிந்தனையைக் கெடுக்கும் வகையில் என் காதுகளுக்கு எதுவும்வரக் கூடாதுன்னுதான் சொன்னேன்.அதுதான் பிரச்சினையா போயிடுத்து.

போலீஸ் குரல்: விஜயேந்திரரும், அவரது ஆதரவாளர்களும் மடத்திலிருந்து வெளியேறினோல், எந்தப்பிரச்சினைக்கும் தர மாட்டேன்னு சங்கரராமன் சொன்னாரா?

புன்சிரிப்புடன் தலையாட்டுகிறார் ஜெயேந்திரர்.

இவ்வாறு காட்சிகள் ஓடுகிறது.

நக்கீரனில் வந்தவை..

இந்தக் காட்சிகள் போலீஸ் விசாரணையில் ஜெயேந்திரர் இருந்தபோது பதிவு செய்யப்பட்ட வாக்குமூலக் காட்சிகள்என்று கூறப்படுகிறது.

நக்கீரன் இதழில் இந்தக் காட்சிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

தற்போது தொலைக்காட்சிகளுக்கு யார் இந்த வீடியோ கேசட்டைக் கொடுத்தது என்று தெரியவில்லை.

லீக் செய்தது போலீஸ்?

ஜெயேந்திரர் ஜாமீனில் வெளியே வந்து, விஜயேந்திரர் சிறைக்குள் அடைபட்டிருக்கும் நிலையில் விஜயேந்திரருக்குஎதிராக ஜெயேந்திரர் கூறிய வாக்குமூலக் காட்சிகள் திடீரென்று வெளியிடப்பட்டிருப்பது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

Jeyandrarமடாதிபதிகள் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகளை தெளிவாக எடுத்துக் காட்டும் பகுதி மட்டுமேஒளிபரப்புக்காகத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சன் டிவி விளக்கம்:

வீடியோ கேசட் வெளியானது குறித்து சன் டிவி வெளியிட்ட விளக்கத்தில்,

புதன்கிழமை மதியம் ஒரு பார்சலில் இந்த வீடியோ காட்சிகள் அடங்கிய கேசட் வந்தது. இதை ஒளிபரப்பலாமாஎன்று கேட்டு உள்துறைச் செயலாளர், டிஜிபி, மாநகர கமிஷ்னர் ஆகியோருக்கு கடிதம் எழுதினோம்.

ஆனால் அவர்களிடமிருந்து ஆட்சேபம் தெரிவித்து பதில் ஏதும் வரவில்லை என்பதால் ஒளிபரப்பினோம் என்றுகூறப்பட்டுள்ளது.

சட்டக் குழு அமைத்த மடம்:

இதற்கிடையே இந்த வீடியோவை லீக் செய்தது யார் என்பது குறித்து விசாரிக்க ஒரு சட்டக் குழுவை சங்கர மடம்அமைத்துள்ளது.

இந்த ஒளிபரப்பு குறித்து இந்து முன்னணித் தலைவர் ராம.கோபாலன் கூறுகையில், இந்த வழக்கே முழுக்க முழுக்கமோசடியானது. வீடியோவை யார் டிவிக்குத் தந்தார்கள்? அதை டிவிக்காரர்கள் ஏன் ஒளிபரப்பினார்கள்? அதன்பின்னணி என்ன என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்.

தமிழக டிஜிபியும், உள்துறைச் செயலாளரும் நேற்றுதான் அடுத்தடுத்து அதிரடியாக மாற்றப்பட்டனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. அதிகாரிகள் மாற்றத்தை பயன்படுத்தி சந்தடிசாக்கில் இந்த கேசட்டை காவல்துறையில் யாரோவெளியிட்டிருக்கலாம் அல்லது அரசே வெளியில் கசிய விட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X