• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துறவியானாலும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமமே: நீதிபதி

By Staff
|

காஞ்சிபுரம்:

Vijayendrarதுறவிகளாகவே இருந்தாலும் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் தான் என விஜயேந்திரரின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி தீர்ப்பில்தெரிவித்தார்.

சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர், அவரது தம்பி ரகு, காஞ்சி சங்கர மடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர் ஆகியோர்ஜாமீன் கோரி செங்கல்பட்டு செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.

இதன் மீதான வழக்கறிஞர்களின் விவாதம் கடந்த 25ம் தேதி நடைபெற்றது. நேற்று இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்து நீதிபதி அக்பர்அலி உத்தரவிட்டார். அவரது தீர்ப்பின் முழு விவரம்:

சங்கரராமன் கொலை மிகவும் கொடூரமானது. இந்த வழக்கின் ஆவணங்கள், கேஸ் டைரி மற்றும் அப்பு, ரவி சுப்பிரமணியம் ஆகியோரின்வாக்குமூலங்களையும் நீதிமன்றம் பரிசீலித்தது.

இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டியது, கூலிப்படை அமர்த்தியது, பணம் வழங்கியது உள்ளிட்டவற்றில் தங்களுக்கு எந்தத் தொடர்பும்இல்லை என்று வாதியும் மற்ற எதிரிகளும் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

காஞ்சி சங்கர மடம் மிகப் பெரிய நிறுவனம். சமய நடவடிக்கைகள் தவிர வேறு பல நிர்வாக நடவடிக்கைகளிலும் ஜெயேந்திரர்,விஜயேந்திரர் ஈடுபட்டு வந்தனர். மடத்தின் தினசரி நடவடிக்கைகளை அவர்கள் நன்றாக அறிவார்கள் என்பதற்கு அடிப்படை ஆதாரம்உள்ளது.

கொலையான சங்கரராமனும், ஜெயேந்திரரும் நசரத்பேட்டை என்ற இடத்தில் சந்தித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. விஜயேந்திரர், ரகு,சுந்தரேச அய்யர் ஆகியோரின் நடவடிக்கைகள் குறித்து சங்கரராமன் அதிருப்தி தெரிவித்ததோடு, அவரது இறுதி எச்சரிக்கை கடிதத்தில்விஜயேந்திரர் நீக்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் சங்கரராமன் கூறியது நிரூபிக்கப்பட்டால், ஜெயேந்திரரை விட விஜயேந்திரரைத்தான் அது அதிகம் பாதித்திருக்கும்.

பிரேமானந்தா, பாதிரியார் ஜான் ஜோசப் வழக்குகளில் கொலை நடந்த சூழ்நிலை, எதிரிகளின் அந்தஸ்து, தகுதி, எதிரிகளின் முன்கொலையுண்டவரின் குடும்பத்தினர் மற்றும் சாட்சிகளின் நிலை, சாட்சியத்தைக் கலைத்தல் போன்றவற்றின் அடிப்படையில் தான் உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுக்களை நிராகரித்தது.

சங்கரராமன் கோயில் வளாகத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். இது குறித்து விசாரித்த போலீஸார் வாதியின் மீது தீவிர குற்றச்சாட்டுக்களைக் கூறியுள்ளனர்.

விஜயேந்திரர் மிகுந்த செல்வாக்கு படைத்தவர். அவரது அந்தஸ்து, பாதிக்கப்பட்டவர் நிலை, சாட்சியங்களைக் கலைத்தல் போன்றஅம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

ஜெயேந்திரருக்கு பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. விஜயேந்திரர் தன்னையும்ஜெயேந்திரரையும் சமமாக நினைக்கக் கூடாது.

ஒரு தனி நபரின் சுதந்திரத்தை நீதிமன்றம் பாதுகாக்கும் வேளையில், இதுபோன்ற கொடூர சம்பவத்தில் கொலையுண்டவரின் குடும்பத்தினர்நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

துறவிகள், சாமியார்கள் மீது சந்தேகம் எழும்போது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற நிலை மாறுபடாது.

தனது தூய்மையை நிரூபிக்க சீதை தீக்குளித்தார். சீதையால் மட்டுமே அவ்வாறு நிரூபிக்க முடியும் என்று இந்த நீதிமன்றம் நம்புகிறது.விஜயேந்திரரை ஜாமீனில் விடுவிக்க எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் அவரது ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்கிறேன்.

அதேபோல் மற்ற எதிரிகளான ரகு, சுந்தரேச அய்யர் ஆகியோரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்கிறேன் என்று நீதிபதி கூறினார்.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X