For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐபி அதிகாரியின் திடுக் புத்தகம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

பாபர் மசூதியை இடிப்பது குறித்து 10 மாதங்களுக்கு முன்பே ஆர்.எஸ்.எஸ்., பாஜக மற்றும் வி.எச்.பி. தலைவர்கள்திட்டமிட்டதாக இந்திய உளவுத்துறையின் முன்னாள் இணை இயக்குனர் தான் எழுதியுள்ள புத்தகத்தில் கூறியுள்ளார்.

இந்திய உளவுத்துறையின் முன்னாள் இணை இயக்குநர் மலோய் கிருஷ்ணாதர் எழுதிய புத்தகத்தில் பாபர் மசூதி இடிப்பு, அதில்மறைந்த பிரதமர் நரசிம்ம ராவ் அரசு காட்டிய மெத்தனம், உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து திடுக்கிடும் தகவல்கள்இடம்பெற்றுள்ளன.

இதுதவிர பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் விவகாரதில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் தோல்வி, தனது உள்துறை அமைச்சர் பூட்டாசிங்கைத் தோற்கடிக்க ராஜீவ் காந்தி பணம் செலவழித்தது, மண்டல் கமிஷன் விவகாரத்தை கையிலெடுத்து முன்னாள் பிரதமர்வி.பி.சிங் அரசுக்கு எதிராக ராஜீவ் காந்தியே கலவரத்தை தூண்டி விட்டது உட்பட பல விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

பல ரகசிய தகவல்களை வெளியிடுவதால், பல முறை யோசித்த பின்பே இந்தப் புத்தகத்தை எழுதியதாகக் கூறும் தார், இதனால்சட்ட சிக்கல் எதுவும் வராது என்று கூறியுள்ளார்.

புத்தகத்தில் அவர் கூறியிருப்பதாவது:

கடந்த 1992ம் ஆண்டு பிப்ரவரி மாதம், முரளி மனோகர் ஜோஷி தனது ரதயாத்திரையை முடித்தபின்பு பாஜக மற்றும சங் பரிவார்அமைப்புகளின் கூட்டம் நடத்தப்பட்டது. இதைக் கண்காணிக்கும் பொறுப்பு உளவுத் துறையில் எனக்குத் தரப்பட்டது.

அந்தக் கூட்டத்தில் பாஜக தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ராஜூ பைய்யா, ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுதர்ஷன்,விஜய ராஜே சிந்தியா, சேஷாத்ரி, வினய் கத்தியார், உமா பாரதி, சம்பத்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அந்தக் கூட்டத்தில் அடுத்து வரும் மாதங்களில் நடத்தப்பட வேண்டிய இந்துத்துவ தாக்குதல்கள் குறித்தும், பாபர் மசூதி இடிப்புகுறித்தும் திட்டம் தீட்டப்பட்டது.

இதற்கு அங்கு கூடியிருந்த தலைவர்கள் அனைவரும் ஒப்புதல் அளித்தனர்.

இக் கூட்டம் தொடர்பான ஆதாரங்கள் அனைத்தையும் எனது உயர் அதிகாரியிடம் ஒப்படைத்தேன். அவர் அதை அப்போதையபிரதமர் நரசிம்ம ராவிடமும், உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவானிடமும் அளித்திருப்பார் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

ஆனால் ராவ் எந்த முடிவையும் எடுக்காத நபராக இருந்தார். அவர் இது தொடர்பாக முடிவு எடுக்கும் முன்பு, அத்வானியும்அவரது சகாக்களும் இந்திய வரலாற்றில் மாபெரும் கறை ஏற்படுத்திய பாபர் மசூதி இடிப்பை நிறைவேற்றி விட்டனர்.

1992 டிசம்பர் 5ம் தேதி அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உட்பட ஆர்,எஸ்.எஸ்., வி.எச்.பி., பாஜக மற்றும் சிவசேனாதலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்திலும், இந்துத்துவா அலையை ஏற்படுத்த அயோத்தி பிரச்சினைதான் சரியான வாய்ப்புஎன்று முடிவெடுக்கப்பட்டது.

பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது, பத்திரிக்கையாளன் வேடத்தில் நான் அங்கு இருந்தேன். சங் பரிவார் தலைவர்களின்அனுமதியுடன் சிவசேனா தொண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

அத்வானிதான் அந்த நெருப்பைப் பற்ற வைத்தார். ஆனால் அவராலேயே அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

நீண்ட காலத்திற்குப் பின்னர் தேசிய ஜனநாயக் கூட்டணி அரசு டெல்லியில் ஏற்பட்டது. தன்னை வந்து சந்திக்குமாறு அத்வானிஇருமுறை எனக்கு அழைப்பு விடுத்தார். மசூதி இடிப்பு தொடர்பான வீடியோ ஆதாரங்கள் தொடர்பான தகவல்களை என் மூலமாகஅறிந்து கொள்ள விரும்பினார்.

என்னிடம் அவை எதுவும் இல்லை என்றும் உளவுத்துறையின் கோப்புகளிலோ, டெல்லிக்கு வெளியிலோ அவை இருக்கலாம்என்றும் கூறினேன். எனக்கு இப்போது அதில் எந்த தொடர்பும் இல்லை என்றும், உளவுத்துறை இயக்குனர் மூலம் அதைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவரிடம் கூறினேன்.

அத்வானியிடம் உளவுத்துறை இயக்குனர் அந்த ஆதாரங்களை அளித்தாரா இல்லையா என்பது எனக்குத் தெரியவில்லை.

இவ்வாறு கிருஷ்ணாதர் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.

மண்டல் கமிஷன் அறிக்கைக்கு எதிரான போராட்டம் குறித்து தார் கூறியிருப்பதாவது:

இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் மண்டல் கமிஷன் அறிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டபோது அதற்கு எதிராக உடனடிகலவரம் வெடித்தது. அந்தக் கலவரத்தை தூண்டி விட்டு, பண உதவி செய்து வளர்த்து காங்கிரஸ் கட்சியினர்தான்.

காங்கிரஸ் கட்சியின் ரகசிய கருவூலங்களில் இருந்து ஏராளமான பணம் இதற்காக செலவழிக்கப்பட்டது. ராஜீவ் காந்தியின்உதவியாளர்கள் மூலம் மாணவர்களின் போராட்டத்திற்கு பண உதவி செய்யப்பட்டதை காங்கிரஸ் கட்சியில் எனக்கு இருந்ததொடர்புகள் மூலம் அறிந்தேன்.

டெல்லியில் மட்டும் ரூ. 20 லட்சம் செலவழிக்கப்பட்டது. இந்தக் கலவரத்தின் மூலம் வி.பி.சிங் அரசை கவிழ்க்க காங்கிரஸ்முயன்றது. சஞ்சய் காந்தியைப் போன்றே ராஜீவ் காந்தியும் மக்களின் உணர்வுகளோடு விளையாடினார் என்று புத்தகத்தில்கூறியுள்ளார் அந்த அதிகாரி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X