• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னையை சுழற்றியடித்த சூறாவளி: மரங்கள், மின் கம்பங்கள் சரிந்தன- குடிசைகள் பறந்தன, சிறுமி பலி

By Staff
|

சென்னை:

சென்னையில் நேற்று நள்ளிரவு பயங்கர சூறாவளிக் காற்று வீசியது. இதில் பல இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சரிந்தன.குடிசைகள் காற்றில் பறந்தன. படகுகள் தூக்கி வீசப்பட்டன. சாலையோர விளம்பரப் பலகைகள் சரிந்து விழுந்தன.

தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை அண்ணா நகர் உட்பட பல பகுதிகளிலும் மரங்கள் சரிந்தன.

சென்னை நகரில் கடந்த 2 நாட்களாக நல்ல வெயில் அடித்தபோதிலும் அவ்வப்போது வானம் மேகமூட்டமாக காணப்படுகிறது.சில சமயங்களில் இடி, மின்னலும் இருக்கிறது. ஆனால் மழை பெய்வதில்லை.

இந் நிலையில் நேற்று காலை திடீரென்று பலத்த சூறாவளிக் காற்று வீசியது. இதில் நைனார் குப்பம், கரிக்காட்டுக் குப்பம்,நடுக்குப்பம், கொட்டிவாக்கம் பகுதிகளில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏராளமான படகுகள் 400 அடி தூரத்திற்குதூக்கி வீசப்பட்டன. 20க்கும் மேற்பட்ட குடிசைகள் பிய்த்து எறியப்பட்டன

சென்னை துறைமுகம் பகுதியில் இந்த சூறாவளிக் காற்றில் படகுகள் தூக்கி வீசப்பட்டன. இங்குள்ள வ.உ.சிதம்பரனாரின் சிலைஇரண்டாக உடைந்தது.

சோழிங்கநல்லூரில் உள்ள பரமேஸ்வரன் நகரில் மின்சாரம் தாக்கியதில் அனிஷா என்ற இரண்டரை வயது சிறுமி உயிரிழந்தாள்.

மூலக்கொத்தளம் அம்மன் கோவில் தெருவில் 6வது மாடியில் போடப்பட்டிருந்த சிமெண்ட் கூரை சரிந்து விழுந்ததில் வீடுஇடிந்தது. இடிபாடுகளுக்கிடையே சிக்கியவர்களை தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்டனர்.

சேத்துப்பட்டு பெக்னிக்கல்ஸ் ரோட்டில் மரம் சரிந்து விழுந்ததில் ஒரு வீடு இடிந்தது. இதில் அந்த வீட்டில் இருந்தவர்கள்காயமடைந்தனர். இவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ஒரு தியேட்டரில் இருந்த விளம்பரப் பலகை சரிந்து விழுந்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்தத 10கார்கள் சேதமடைந்தன. திருவல்லிக்கேணி வாலாஜா ரோட்டின் ஓரம் நிறுத்தப்பட்டிருந்த வேன்கள் மீது மரம் சரிந்து விழுந்தது.

பஸ், ரெயில் போக்குவரத்து பாதிப்பு:

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தீயணைப்புப் படையினர் விரைந்து மரங்களை நவீன கருவிகள் மூலம்அறுத்து அப்புறப்படுத்தினார்கள். இதன் பிறகே அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.

வியாசர்பாடி பகுதியில் ரயில் தண்டவாளத்தின் மீது மரம் விழுந்தது. இதனால் சென்ட்ரல், திருவள்ளூர் இடையே ரயில்போக்குவரத்து நிறுத்தப்பட்டது. ரயில்வே ஊழியர்கள் மரத்தை அகற்றிய பிறகு ரயில் போக்குவரத்து தொடங்கியது.

இந்த சூறாவளிக்காற்றால் சென்னை நகரில் ஆழ்வார்பேட்டை டிடிகே சாலை, ராஜாஜி சாலை, நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை,ராஜரத்தினம் ஸ்டேடியம் பகுதி உட்பட 23 இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்தன. இதனால் இப்பகுதிகளில் பல மணிநேரம்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல இடங்களில் விளம்பரப் பலகைகள் சரிந்து விழுந்தன.

கடலில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் தான் இந்த சூறாவளிக் காற்று வீசியதாக வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் சூறாவளிக்கு இடையே தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்ணா நகர், முகப்பேர், அம்பத்தூர், ஆவடி, தாம்பரம்,கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனத்த மழை பெய்தது. அத்தோடு இடி, மின்னலும் பயங்கரமாக இருந்தது.

இந்த திடீர் மழை மற்றும் சூறாவளியால் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கியுள்ளது. மின் கம்ப்கள் சரிந்ததால் பலஇடங்களில் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.

பழைய மகாபலிபுரம் சாலையின் பெரும்பாலான பகுதிகள் இந்த சூறாவளிக் காற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.கொட்டிவாக்கம் முதல் உத்தண்டி வரையிலும் கடற்கரையோரங்களில் இந்த சூறாவளிக் காற்று மக்களை பெரும் பீதியில்ஆழ்த்தியது.

சுனாமியால் உத்தண்டி கிராமம் பெரும் பாதிப்புக்குள்ளானது. தற்போதுதான் படிப்படியாக அந்த பாதிப்பிலிருந்து மீண்டு வரும்நிலையில் திடீரென்று வீசிய இந்த சூறாவளிக் காற்று மீனவர்களுக்கு பெரும் அச்சத்தை கொடுத்துள்ளது.

Mail this to a friend  Post your feedback  Print this page 

வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X