For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆசிரமம் ஆரம்பித்தார் சேலம் குட்டிச் சாமியார்!

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

சிறிது காலத்திற்கு முன்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சேலம் குட்டிச் சாமியார் பரணீதரன், சேலம் நகரில் புதிதாக ஆசிரமம்ஒன்றைத் தொடங்கியுள்ளார்.

Baranidharan

சேலம் பொன்னம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் பட்டாபிராமன். இவரது மகன் தான் பரணீதரன். 14 வயதாகும் பரணீதரன்,கர்நாடக மாநிலம் மந்தராலயம் சென்று அங்கு சாமியாராக தீட்சை பெற்றுக் கொண்டார். இதை அவரது குடும்பத்தினர்ஏற்கவில்லை.

சேலம் வந்த பின்னரும் தனது குடும்பத்துடன் தங்காமல் தனியாக தங்கத் தொடங்கினார் பரணீதரன். இதையடுத்து பட்டாபியும்,அவரது குடும்பத்தாரும் சேர்ந்து பரணீதரனை தங்களுடன் அழைத்துச் சென்றனர். ஆனால் அவர்களிடமிருந்து தப்பி வந்தபரணீதரன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சேலம் மட்டுமல்லாது தமிழகத்தையே இது பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது.

இதையடுத்து மதுரை ஆதீனம் தலையிட்டு இந்தப் பிரச்சினையில் சமரசம் ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து ஜெயேந்திரரைச்சந்தித்தார் குட்டிச் சாமியார். ஜெயேந்திரர், குட்டிச் சாமியாருக்கு ஸ்ரீவித்யா சங்கர சரஸ்வதி சுவாமிகள் என்று பெயரும் சூட்டினார்.அவரை சங்கர மடத்தின் புதிய மடாதிபதியாக ஜெயேந்திரர் நியமிக்கப் போவதாகக் கூட செய்திகள் வெளியாகின.

இந்தச் சூழ்நிலையில், திடீரென தலைமறைவானார் குட்டிச் சாமியார். பல மாதங்களாக அவரைக் காணவில்லை. தற்போதுதிடீரென குட்டிச் சாமியார் சேலம் வந்துள்ளார். புதிதாக ஒரு ஆசிரமத்தையும் அவர் ஆரம்பித்துள்ளார். விஜயராகவபுரத்தில் இந்தஆசிரமம் அமைந்துள்ளது.

ஒரு கார்ஷெட்தான் ஆசிரமமாக மாறியுள்ளது. ஸ்ரீவித்யா சங்கர சரஸ்வதி சுவாமிகள் ஆசிரமம் என தனது பெயரையேஆசிரமத்திற்குச் சூட்டியுள்ளார் குட்டிச் சாமியார். முருகன், விநாயகர் ஆகிய கடவுள் படங்களுடன் மறைந்த காஞ்சிப்பெரியவரின் படமும் ஆசிரமத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சந்திரமெளலீஸ்வரர் விக்ரகமும் இங்கு வைக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை முதல் இடைவிடாமல் பல்வேறுபூஜைகளை செய்தார் குட்டிச் சாமியார். பின்னர் மாலையில் குட்டிச் சொற்பொழிவும் ஆற்றினார். ஏராளமான பக்தர்கள் இந்தபூஜை மற்றும் சொற்பொழிவில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிகளின் போது குட்டிச சாமியாரின் தாய், தந்தையும் கலந்து கொண்டனர். பூஜை மற்றும் சொற்பொழிவுக்குப் பிறகுகுட்டிச் சாமியார் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான் தலைமறைவாகவில்லை. பத்திரிக்கையாளர்களைத் தான்சந்திக்கவில்லை, மாறாக பக்தர்களை தினசரி சந்தித்துக் கொண்டு தான் இருந்தேன்.

இது ஆசிரமமோ, மடமோ அல்ல, ஆன்மீக மையம். இங்கு யார் வேண்டுமானாலும் வந்து கடவுளை வணங்கலாம். தினசரி 2வேளை பூஜை நடைபெறும். தற்போது சதுர்மாஸ்ய விரதம் இருந்து வருகிறேன். தொடர்ந்து இங்கு தங்கி எனது ஆன்மீகபணியைத் தொடருவேன் என்றார் குட்டிச் சாமியார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X