ஆர்.எம்.வீ. 80வது பிறந்த நாள்: தலைவர்கள் வாழ்த்து
சென்னை:
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம். வீரப்பனின் 80வது பிறந்த நாளையொட்டி பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அவருக்குவாழ்த்து தெரிவித்தனர்.
அவரது வீட்டில் எம்.ஜி.ஆர். கழக பிரமுகர்கள், தொண்டர்கள் நேரில் வந்து வாழ்த்தினர். முன்னாள் அமைச்சர்கள் ராஜாராம்,வி.வி.சுவாமிநாதன், கவிஞர் வாலி, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்,த யாரிப்பாளர் ஏவி.எம். சரவணன், ஜனாநயகமுன்னேற்றக் கழக தலைவர் ஜெகத்ரட்சகன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று மாலை ஜெகத்ரட்சகனை தலைவராகக் கொண்ட ஆழ்வார்கள் ஆய்வு மையம் சார்பில் பிறந்த நாள் விழா நடைபெறுகிறது.இதில் திமுக தலைவர் கருணாநிதி சிறப்புரையாற்றுகிறார். அத்தோடு கவிஞர் வாலிக்கு உ.வே.சாமிநாதய்யர் விருது,எம்.எஸ்.விஸ்வநாதனுக்க முத்தையா செட்டியார் விருது, எழுத்தாளர் பெ.சு.மணிக்கு ம.பொ.சி விருது ஆகியவற்றைவழங்குகிறார்.
| ||||
![]() திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்! |