For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இட ஒதுக்கீடு: என்னுடன் மோத வேண்டாம்-ராமதாஸுக்கு மொய்லி கடிதம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இட ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதை விட்டுவிட்டு என்னுடன் மோதவேண்டாம் என வீரப்ப மொய்லி, பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கடிதம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிற்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான மத்திய அரசின் உயர் மட்டக் குழுத்தலைவர் வீரப்ப மொய்லி மீது சமீபத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்தார்.மேலும், மொய்லி தமிழகத்திற்கு வரும்போது அவருக்கு பாமகவினர் கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்றும்கோபமாக கூறியிருந்தார்.

இதனால் பாமக, காங்கிரஸ் இடையே அறிக்கைப் போர் நடந்தது. இந்த நிலையில், ராமதாஸுக்கு வீரப்பமொய்லி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் மொய்லி கூறியிருப்பதாவது:

எனக்கு எதிராக போராட்டம் நடத்தமாறு ஏன் உங்களது கட்சியினரை வலியுறுத்தியுள்ளீர்கள் என்பதை என்னால்புரிந்து கொள்ள முடியவில்லை. இட ஒதுக்கீடு தொடர்பாக உங்களுக்கு அதிருப்தி இருந்தால், ஆதங்கம்இருந்தால் அது குறித்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிடம் தான் நீங்கள் தெரிவிக்க வேண்டும்.

மத்திய அரசைத்தான் நீங்கள் வலியுறுத்த வேண்டும், அரசுக்குத் தான் நெருக்கடி கொடுக்க வேண்டும்,விமர்சிக்க வேண்டும். அதை விடுத்து எனக்கு எதிராக போராட்டம் நடத்துமாறு நீங்கள் கூறியுள்ளதுஆச்சரியமாக உள்ளது. என்னுடனான மோதலை விட்டு விட்டு மத்திய அரசை அணுகுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்.

இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் பிரிவை சேர்க்க வேண்டாம் என்று நான் கூறியதாகவும், காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி தலையிட்டு இந்த முடிவை எடுக்க வைத்ததாகவும் கூறப்படுவதில் உண்மை இல்லை. கிரீமிலேயர் பிரிவு குறித்து எனது தலைமையிலான கமிட்டி எந்த இறுதி முடிவையும் எடுக்கவில்லை.

இந்த விஷயத்தில் சோனியா காந்தியின் தலையீடு இருந்ததாக கூறப்படுவதில் உண்மை கிடையாது. அதற்கானஅவசியம் கிடையாது. இந்த விவகாரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு தான் இறுதி முடிவு எடுக்கமுடியும். நீங்கள் அந்தக் கூட்டணியில் உள்ளீர்கள். உங்கள் மகன் அன்புமணி மத்திய அமைச்சராக உள்ளார்.எனவே நீங்கள் தாராளமாக மத்திய அரசை அணுகி உங்கள் குறைகளைக் கூறலாம்.

என் மீதான உங்களது கருத்துக்கள் தவறானவை. அவற்றை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் சமூகத்தினர் மீது எனக்கு அக்கறையே இல்லை என்பது போலபேசியுள்ளீர்கள்.

கர்நாடக மாநலத்தில் நான் முதல்வராக இருந்த போது சின்னப்பா கமிட்டி அறிக்கையை கடும் எதிரிப்புக்குமத்தியில் அமல்படுத்தினேன். அப்போது தேவகவுடா தலைமையில் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துபோராட்டங்கள் நடத்தப்பட்டன. நான் அமல்படுத்திய சின்னப்பா கமிட்டி பரிந்துரைகள் தான் இன்றைக்கு நாடுமுழுவதற்கும் சிறந்த முன்னுதாரணமாக விளங்ககிறது.

நாட்டின் எந்த நீதிமன்றத்திலும் இந்த கமிட்டியின் பரிந்துரைகளை எதிர்த்து யாரும் வழக்கு போட்டதில்லைஎன்பதை உங்களது கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். அதேபோல, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குகர்நாடக மாநில உள்ளாட்சிகளில் இட ஒதுக்கீட்டை வழங்கியதும் நான் தான்.

அதேபோல, தாழ்த்தப்ப்ட்ட, பழங்குடியினர் சமூகத்தினர் குறைந்த கட்டணத்தில் பொறியியல் கல்வி பயிலகர்நாடகத்தில் வழி வகை செய்ததும் எனது அரசுதான். நீங்கள் எனக்கு எதிராக போராட்டம் நடத்தக் கூடாதுஎன்று எதிர்பார்த்து இவற்றை உங்களுக்கு தெரிவிக்கவில்லை.

மாறாக, உண்மை நிலையை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இவற்றை கூறுகிறேன். உங்களதுஅறிக்கையால் வருத்தப்பட வேண்டாம் என தமிழக காங்கிரஸாருக்கு நான் வேண்டுகோள் விடுத்துள்ளேன்.நட்புடன் உள்ள இரு கட்சிகளுக்கிடையே மனக் கசப்பு நேரிட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்தக்கடிதத்தை பகிரங்கமாக பத்திரிக்ககைகளுக்கும் வெளியிடடுள்ளேன என்று கூறியுள்ளார் மொய்லி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X