For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ.400 கோடியில் அம்பானியின் கனவு அரண்மனை

By Staff
Google Oneindia Tamil News

மும்பை:முகேஷ் அம்பானி ரூ.400 கோடி செலவில் 40 மாடிகள் கொண்ட நவீன அரண்மனை ஒன்றை உருவாக்கி வருகிறார்.

ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரான முகேஷ் அம்பானி தன் எதிர்கால குடியிருப்புக்காக மும்பையின் தெற்கு பகுதியிலுள்ள டோனி ஆல்மவுண்ட் சாலையில் மிக பிரம்மாண்டமான நவீன அரண்மனை ஒன்றை கட்டி வருகிறார்.

Mukesh Ambani

ஒரு லட்சம் சதுரஅடியில் உருவாகி வரும் இந்த மாளிகையின் வெளிப்புறத்தில் பச்சைபசேல் என்று கட்டிடம் முழுவதும் காட்சியளிக்க பசுமையான கொடிகள் வைத்து அலங்கரிக்க போகிறார்.

இந்த கட்டிடம் முழுவதும் ஒயர் இல்லாத தகவல் பரிமாற்ற வசதி செய்யப்படுகிறது.அனைத்து தளங்களிலும் இன்னிசையை ரசிக்கும் வண்ணம் ஆடியோ சாதனங்கள் பொருத்தப்படும். கட்டிடத்தின் உச்சியில் கட்டபோகும் 4 தளங்களும் அம்பானி குடும்பத்தின் வசிப்பிடமாக இருக்கும்.

சமயலறை, சலவைகூடம் என ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனி தளங்கள் உருவாக்கப்படுகிறது. கீழே 6 தளங்களும் வாகனங்கள் நிறுத்துவதற்காக பயன்படுத்தப்படும்.

இதில் ஒரு சிறிய திரையரங்கமும், உடற்பயிற்சி, நூலகம், நீச்சல் குளம் என பல வசதிகளுடன் உருவாக்கப்படுகிறது. இந்த மாளிகை ஒரு 5 நட்சத்திர நினைவுப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது.

அம்பானி, ஹெலிகாப்டர் வந்திறங்க ஹெலிபேட் தளம் இந்த கட்டிடத்தின் உச்சியில் அமைக்க நினைத்தார். ஆனால் அரசு அதற்கு அனுமதியளிக்காது என தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X