For Quick Alerts
For Daily Alerts
Just In

மாட்டு வண்டியாக மாறிய ஆட்டோ
மதுரை: பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, ஆட்டோவை, மாட்டு வண்டி போல கயிறு கட்டி இழுத்து வந்து நூதனப் போராட்டம் நடத்தினர்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். ஒவ்வொரு ஊரிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சில ஊர்களில் நூதனப் போராட்டங்களும் நடத்தப்பட்டன.
மதுரையில் ஏஐடியூசியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ஆட்டோவை மாட்டு வண்டி போல கயிறு கட்டி இழுத்துச் சென்றனர்.
நகரின் முக்கியப் பகுதிகள் வழியாக இந்த நூதன ஊர்வலம் சென்றது.
Comments
Story first published: Tuesday, February 19, 2008, 9:39 [IST]