For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ. 144 கோடிக்கு ஏலம் போன 75 வீரர்கள்-சென்னை அணி சாதனை

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: மும்பையில் நேற்று நடந்த கிரிக்கெட் வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 75 வீரர்கள், ரூ. 144 கோடிக்கு ஏலம் விடப்பட்டனர். சென்னை அணிதான் அதிகபட்சமாக ரூ. 23.9 கோடி அளவுக்கு ஏலம் எடுத்துள்ளது. ஜெய்ப்பூர் அணிதான் குறைந்தபட்ச தொகைக்கு வீரர்களை ஏலம் எடுத்தது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இந்தியன் பிரீமியர் லீக் 20-20 போட்டித் தொடர் ஏப்ரல் மாதம் 18ம் தேதி பெங்களூரில் தொடங்குகிறது.

இதில் சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூர், ஜெய்ப்பூர், மொஹாலி, ஹைதராபாத் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன. இதில் சென்னையை இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசவும், டெல்லியை ஜி.எம்.ஆர்.ஹோல்டிங்ஸ் நிறுவனமும், மும்பையை முகேஷ் அம்பானியும், கொல்கத்தாவை ஷாருக் கானும், பெங்களூரை விஜய் மல்லையாவும், ஜெய்ப்பூரை எமர்ஜிங் மீடியாவும், மொஹாலியை நடிகை ப்ரீத்தி ஜிந்தாவும், ஹைதராபாத்தை டெக்கான் குரானிக்கிளும் ஏலகத்தில் எடுத்தன.

இதையடுத்து நேற்று இந்த அணிகளுக்கான வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். இதுவரை விளையாட்டு உலகில் இப்படி வீரர்கள் ஏலம் விடப்பட்டதில்லை என்பதால் இந்த ஏலம் உலக அளவில் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.

அதற்கேற்ப படு விறுவிறுப்பாக ஏலம் நடந்தது. மொத்தம் 82 வீரர்கள் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சிலரை யாரும் ஏலத்தில் கேட்கவில்லை. இதையடுத்து அவர்கள் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் வைக்கப்பட்டனர். அவர்களைத் தவிர 75 வீரர்கள் நேற்று ஏலம் போனார்கள்.

அதிகபட்சமாக சென்னை அணிதான் பல வலுவான வீரர்களை, அதிக விலைக்கு ஏலம் எடுத்து சாதனை படைத்துள்ளது. இந்த அணி ரூ. 23.9 கோடி அளவுக்கு ஏலம் எடுத்துள்ளது.

சென்னை அணியில் டோணி (ரூ 6 கோடி), ஜேக்கப் ஓரம் (ரூ. 2.7 கோடி), மோர்க்கல் (ரூ. 2.7 கோடி), சுரேஷ் ரெய்னா (ரூ. 2.6 கோடி), முரளீதரன் (ரூ. 2.4 கோடி), மாத்யூ ஹைடன் (ரூ. 1.5 கோடி), ஸ்டீவன் பிளமிங் (ரூ. 1.4 கோடி), மைக் ஹுஸே (ரூ. 1.4 கோடி), பார்த்தீவ் படேல் (ரூ. 1.3 கோடி), ஜோகீந்தர் சர்மா (ரூ. 90 லட்சம்), மெக்காய டினி (ரூ. 80 லட்சம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதற்கு அடுத்து அதிக தொகைக்கு வீரர்களை ஏலம் எடுத்த அணி ஹைதராபாத். இந்த அணி ரூ. 23.54 கோடி அளவுக்கு ஏலம் எடுத்துள்ளது. டோணிக்கு அடுத்து அதிக தொகைக்கு ஏலம் போன ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் ஹைதராபாத் அணியில்தான் இடம் பெறுகிறார்.

ஹைதராபாத் அணியில், சைமண்ட்ஸ் (ரூ. 5.4 கோடி), ஆர்.பி. சிங் (ரூ. 3.5 கோடி), ரோகித் சர்மா (ரூ. 3 கோடி), கில்கிறைஸ்ட் (ரூ. 2.8 கோடி), ஷாஹித் அப்ரிடி (ரூ. 2.7 கோடி), கிப்ஸ் (ரூ. 2.3 கோடி), வி.வி.எஸ்.லட்சுமண் (ரூ. 1.5 கோடி), ஸ்காட் ஸ்டைரிஸ் (ரூ. 70 லட்சம்), சமந்தா வாஸ் (ரூ. 80 லட்சம்), சோய்சா (ரூ. 44 லட்சம்), சமர சில்வா (ரூ. 40 லட்சம்) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

பிற அணிகளில் இடம்பெற்றுள்ள வீரர்கள் விவரம்

பெங்களூர் - டிராவிட் (ஐகான் வீரர்), கல்லீஸ் (ரூ. 3.6 கோடி), கும்ப்ளே (ரூ. 2 கோடி), கேமரூன் ஓயிட் (ரூ. 2. கோடி), ஜாகிர்கான் (ரூ. 1.8 கோடி), மார்க் பவுச்சர் (ரூ. 1.8 கோடி), நாதன் பிரேக்கன் (ரூ. 1.3 கோடி), ஸ்டெயின் (ரூ. 1.3 கோடி), ஷிவ் நரைன் சந்தர்பால் (ரூ. 80 லட்சம்), வாசிம் ஜாபர் (ரூ. 60 லட்சம்)

கொல்கத்தா - கங்குலி (ஐகான் வீரர்), இஷாந்த் சர்மா (ரூ. 3.8 கோடி), கிறிஸ் கெய்ல் (ரூ. 3.2 கோடி), மெக்கல்லம் (ரூ. 2.8 கோடி), டேவிஸ் ஹூஸே (ரூ. 2.5 கோடி), சோயிப் அக்தர் (ரூ. 1.7 கோடி), முரளி கார்த்திக் (ரூ. 1.7 கோடி), ரிக்கி பான்டிங் (ரூ. 1.6 கோடி), அஜீத் அகர்கர் (ரூ. 1.4 கோடி), உமர் குல் (ரூ. 60 லட்சம்), தைபு (ரூ. 50 லட்சம்).

டெல்லி - வீரேந்தர் ஷேவாக் (ஐகான் வீரர்), கவுதம் காம்பீர் (ரூ. 2.9 கோடி), மனோஜ் திவாரி (ரூ. 2.7 கோடி), முகம்மது ஆசிப் (ரூ. 2.6 கோடி), வெட்டோரி (ரூ. 2.5 கோடி), திணேஷ் கார்த்திக் (ரூ. 2.1 கோடி), சோயிப் மாலிக் (ரூ. 2 கோடி), கிளன் மெக்ராத் (ரூ. 1.4 கோடி), டிவில்லியர்ஸ் (ரூ. 1.2 கோடி), தில்ஷான் (ரூ. 1 கோடி), மகரூப் (ரூ. 90 லட்சம்).

மொஹாலி - யுவராஜ் சிங் (ஐகான் வீரர்), இர்பான் பதான் (ரூ. 3.7 கோடி), பிரெட் லீ (ரூ. 3.6 கோடி), சங்கக்காரா (ரூ. 2.8 கோடி), ஸ்ரீசாந்த் (ரூ. 2.5 கோடி), பியூஸ் சாவ்லா (ரூ. 1.6 கோடி), மகிளா ஜெயவர்த்தனே (ரூ. 1.1 கோடி), ராம் நரேஷ் சர்வான் (ரூ. 90 லட்சம்), கேடிச் (ரூ. 80 லட்சம்), ரமேஷ் பவார் (ரூ. 68 லட்சம்).

மும்பை - சச்சின் டெண்டுல்கர் (ஐகான் வீரர்), ஜெயசூர்யா ( ரூ. 3.9 கோடி), ஹர்பஜன் சிங் (ரூ. 3.4 கோடி), ராபின் உத்தப்பா (ரூ. 3.2 கோடி), ஷான் பொல்லாக் (ரூ. 2.2 கோடி), மலிங்கா (ரூ. 1.4 கோடி), போஸ்மன் (ரூ. 70 லட்சம்), பெர்னாண்டோ (ரூ. 60 லட்சம்).

ஜெய்ப்பூர் - முகம்மது கைப் (ரூ. 2.7 கோடி), கிரீம் ஸ்மித் (ரூ. 1.9 கோடி), யூசுப் பதான் (ரூ. 1.9 கோடி), ஷான் வார்னே (ரூ. 1.8 கோடி), முனாப் படேல் (ரூ. 1.1 கோடி), யூனிஸ் கான் (ரூ. 90 லட்சம்), ஜஸ்டின் லாங்கர் (ரூ. 80 லட்சம்), கம்ரான் அக்மல் (ரூ. 60 லட்சம்)

இவர்களில் முத்திரை வீரர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள சச்சின், கங்குலி, டிராவிட், ஷேவாக், யுவராஜ் சிங் ஆகியோருக்கு அவர்கள் அணியில் அதிக தொகை பெறும் வீரரை விட கூடுதலாக 15 சதவீத ஊதியம் கிடைக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X