For Quick Alerts
For Daily Alerts
Just In

மதானிக்கு நிதி திரட்ட பஹ்ரைன் தடை
துபாய்: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, சிறை சென்று பின்னர் விடுதலையான கேரள மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானிக்கு ஆதரவாக நிதி திரட்ட பஹ்ரைன் அரசு தடை விதித்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மதானி, கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு நிரபராதி என நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், மதானிக்கு ஆதரவாக பஹ்ரைனில், அன்வருல் இஸ்லாம் கலாச்சார அமைப்பு என்ற அமைப்பு நிதி திரட்டி வருகிறது.
ஆனால் இதற்கு பஹ்ரைன் அரசு தடை விதித்துள்ளது. இப்படி அனுமதி இல்லாமல் நிதி திரட்டுவது சட்டவிரோதம் என பஹ்ரைன் அரசு எச்சரித்துள்ளது.
Comments
Story first published: Wednesday, February 27, 2008, 16:48 [IST]