For Daily Alerts
Just In
சிங்கப்பூர் தமிழர்களுக்காக புதிய டிவி உதயம்
சிங்கப்பூர்: சிங்கப்பூரைச் சேர்ந்த மீடியாகார்ப் நிறுவனம், தமிழர்களுக்காக வசந்தம் என்ற பெயரில் புதிய டிவியை தொடங்கவுள்ளது.
இப்போது இந்த நிறுவனத்தின் சென்ட்ரல் டிவியில் வாரத்திற்கு 29 மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. விரைவில் தனி சேனலாக வசந்தம் தொடங்கப்படவுள்ளது.
இத்தகவலை சிங்கப்பூர் நாட்டு தகவல் தொடர்பு, கலைத் துறை இணை அமைச்சர் பாலாஜி சதாசிவன் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த சேனலில் தமிழ் தவிர பிற இந்திய மொழிகளிலும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளதாம்.
மேலும் குழந்தைகளைக் கவரும் வகையிலான பல்வேறு நிகழ்ச்சிகளையும் இந்த சேனலில் ஒளிபரப்பவுள்ளனர்.