For Daily Alerts
Just In
மீண்டும் குற்றால அருவிகளில் வெள்ளம்
குற்றாலம்: குற்றாலத்தில் பெய்த தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவியில் மீண்டும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலத்தில் கடந்த ஒரு மாத காலமாக தண்ணீர் இல்லாமல் அருவி கரைகள் வறண்டன. வங்ககடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணாக கடந்த 4 தினங்களாக அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுகிறது.
இதனால் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்று வட்டார ஊர்மக்கள் கூட்டமாக கூட்டமாக வந்து ஆனந்த குளியல் போட்டனர்.
ஆனால் பகல் முழுவதும் பெய்த மழையால் மெயின்அருவியில் தண்ணீர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி கொட்டியது. எனவே பொதுமக்கள் அருவியின் ஒரத்தில் இருந்தே குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
மழையால் மெயினருவி பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடந்த வளர்ச்சி பணிகளும் தடைப்பட்டன.