பெங்களூரில் நாய் மீது விமானம் மோதல் - போக்குவரத்து பாதிப்பு
பெங்களூர்: பெங்களூர் விமான நிலையத்தில் நேற்று கிங்பிஷர் விமானம் கிளம்பியபோது ரன்வேயில் நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. இதில் அதன் மீது விமானம் மோதி விபத்துக்குள்ளானது. இதையடுத்து பல மணி நேரத்திற்கு விமான நிலையம் மூடப்பட்டதால் பயணிகள் பெரும் அவதியடைந்தனர்.
பெங்களூர் விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு 10 மணிக்கு 29 பயணிகளுடன் கிங் பிஷர் விமானம், ஹைதராபாத்துக்குக் கிளம்பியது. விமானம் ஓடுபாதையில் சென்றபோது திடீரென ஒரு நாய் ரன்வேயில் ஓடிவந்து விமானத்தின் முன் சக்கரத்தில் மோதியது. இதனால் உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டது.
நாய் மோதியதால் விமானத்தின் முன் சக்கரம் உடைந்து போனது. உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டதால் விமானத்திற்குள் இருந்த 2 பயணிகள் லேசான காயமடைந்தனர். உடனடியாக பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து தரையிறக்கப்பட்டனர்.
விமான நிலையமும் மூடப்பட்டது. இதனால் பயணிகள் அனைவரும் செய்வதறியாமல் திகைத்தனர். பல மணி நேரமாகியும் விமானங்கள் எதுவும் இயக்கப்படவில்லை.
சென்னையிலிருந்து பெங்களூர் சென்ற விமானமும் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தது.
பல மணி நேரமாக விமானங்கள் கிளம்பாததால் விமான நிலையத்தில் காத்திருந்த பயணிகள் பெரும் பாதிப்படைந்தனர். விமான நிலைய அதிகாரிகள் முறையான தகவல்களைக் சொல்லாமல் அலைக்கழிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். அதிகாலையில்தான் விமானப் போக்குவரத்து சீரடைந்து விமானங்கள் மீண்டும் இயக்கப்பட்டன.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications