For Daily Alerts
Just In
நாளை சித்திரை பிறப்பு-கோயில்களில் சிறப்பு வழிபாட்டுக்கு தடை
சென்னை: தை மாதம் முதல் தேதி தான் தமிழ் புத்தாண்டு என அறிவிக்கப்பட்டுள்ளதால் நாளை சித்திரை முதல் நாளை புத்தாண்டாகக் கருதி சிறப்பு வழிபாடுகள் நடத்த வேண்டாம் என இந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அறநிலைய கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்துக் கோயில்களின் செயல் அலுவலர்களுக்கும் துறை சார்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,
தை மாதம் முதல் தேதியை தமிழ் புத்தாண்டாக அறிவித்து தமிழக அரசு சட்டம் இயற்றியுள்ளது. எனவே வரும் சித்திரை முதல் தேதியன்று (நாளை) இந்து அறநிலைய கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் எந்த சிறப்பு வழிபாடும் நடத்துவதாக அறிவிக்கப்பட வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.