For Daily Alerts
Just In
திருச்சி என்ஐடி வளாகத்தி்ல் சென்ட்ரல் ஸ்கூல்
திருச்சி: திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப கல்வி மையத்தில்-என்ஐடி (NIT) ஒரு புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்கப்படவுள்ளது.
இதற்காக நிலத்தையும் கட்டடங்களையும் ஒதுக்கியுள்ளது என்ஐடி.
இதையடுத்து திருச்சி கேந்திரிய வித்யாலயாவின் முதல்வர் ஜெயஜோதிக்கு சங்கடன் அமைப்பு ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், என்ஐடி வழங்கும் நிலத்தையும் அங்குள்ள கட்டடங்களையும் ஆய்வு செய்து பதிலளிக்குமாறு கூறப்பட்டுள்ளது.
அவர் தனது பதிலை தாக்கல் செய்த பின் என்ஐடி வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமையும்.
கேந்திரிய வித்யாலயா பள்ளியை உருவாக்க கிட்டத்தட்ட 15 ஏக்கர் நிலத்தை வழங்க என்ஐடி முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.