For Daily Alerts
Just In
ஊட்டி ட்ராலி விபத்து: பலி எண்ணிக்கை 3ஆனது
குன்னூர்: ஊட்டி மலை ரயில் பாதையில் நடந்த ட்ராலி விபத்தில் மேலும் ஒரு ஊழியர் பலியானார்.
கடந்த 11ம் தேதி ஊட்டி மலை ரயில் பாதையில் தண்டவாள சீரமைப்பு பணிக்காக 8 ஊழியர்கள் ட்ராலியில் சென்றனர். காட்டேரி என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, ட்ராலி பிரேக் பிடிக்காமல் வேகமாக சென்று தண்டவாளத்தில் இருந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் 2 ஊழியர்கள் பரிதாபமாக இறந்தனர். படுகாயமடைந்த கிருஷ்ணன் (55), ராஜூ (51), முகமது சித்திக் (55), ஜோ (54), சுலைமான், காந்தி (50) ஆகியோர் கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் டிராக்மேன் முகமது சித்திக் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதனால் பலியானோர் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.
: