For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பத்மநாபனுடன் ராமதாஸ் சந்திப்பு-சிபிஐ விசாரிக்க சுவாமி கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

Subramanyam Swami
சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளின் முக்கிய பிரமுகரான கே.பத்மநாபனை தேடி சி.பி.ஐ. படை ஜெர்மனி சென்றுள்ளது. ஆனால் கடந்த ஜனவரி 9ம் டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் தாய்லாந்தில் பத்மநாபனை சந்தித்துள்ளனர். இது குறித்து அவர்களிடம் சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கோரியுள்ளார்.

சேது சமுத்திர திட்டம் சவப் பெட்டியில் இருக்கிறது. இந்த திட்டத்தை ரத்து செய்து விட்டதாக மத்திய அரசு அடுத்த மாதம் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கிறது.

சேது சமுத்திரத் திட்டத்துக்கு மாற்று திட்டமாக கொல்கத்தாவில் இருந்து தூத்துக்குடி வரை சரக்கு ரெயில் பாதை அமைக்க வேண்டும். தற்போது தேவையில்லாமல் தூத்துக்குடி துறைமுகம் அருகே ரூ. 538 கோடி செலவில் கடலை ஆழப்படுத்தப் போவதாக சொல்கிறார்கள்.

விலைவாசி உயர்வுக்கு கச்சா எண்ணெய் விலை உயர்வே காரணம் என்று மத்திய அரசு கூறுகிறது. 1 லிட்டர் பெட்ரோலின் விலை ரூ.22 தான். மீதி எல்லாமே வரியாகத்தான் வசூலிக்கப்படுகிறது.

இந்த வரிகளைக் குறைத்தாலே பெட்ரோல் விலையை கணிசமாக குறைக்க முடியும்.

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ரூ.25க்கு பெட்ரோல் விற்க ஏற்பாடு செய்வேன்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக கே.பத்மநாபனை தேடி சி.பி.ஐ. படை ஜெர்மனிக்கு சென்றுள்ளது.

ஆனால் கடந்த ஜனவரி 9ம் தேதி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஜி.கே. மணி, விடுதலை சிறுத்தைகள் லைவர் திருமாவளவன் ஆகியோர் மலேசியா சென்றனர். அங்கிருந்து தாய்லாந்து சென்று பத்மநாபனை சந்தித்துள்ளனர்.

விமான நிலையத்தில் விடுதலைப் புலிகள் அவர்களை வரவேற்றும் இருக்கிறார்கள். இதற்கான புகைப்பட ஆதாரம் என்னிடம் இருக்கிறது. எனவே இதுகுறித்து ராமதாசிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

இந்திய பங்குச் சந்தையில் முதலீட்டில் பார்ட்டிசிபேட்டரி நோட்ஸ் மூலம் ஏராளமான பணத்தை தீவிரவாத அமைப்புகள் புழக்கத்தில் விட்டுள்ளன. எனவே பார்ட்டிசிபேட்டரி நோட்ஸை குறிப்புகளை ஒழிக்க வேண்டும் என்று பாதுகாப்பு துறையும், செபி அமைப்பும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளன.

இருந்தாலும் ப.சிதம்பரம் அதை ஒழிக்க மறுக்கிறார். இதுபற்றி பல்வேறு கேள்விகளை ஜெயலலிதா எழுப்பியிருக்கிறார். அதற்கு பதில் கூற முடியாமல் தனது அமைச்சகம் மூலம் அவர் பதில் சொல்ல வைத்துள்ளார் சிதம்பரம் என்றார் சுவாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X